உடலில் உள்ள பல நோய்களை விரட்டும் பனங்கருப்பட்டி! மருத்துவ நன்மைகள் ஏராளம்

Report Print Kavitha in மருத்துவம்

கிராமப்பகுதிகளில் பனங்கருப்பட்டி என்பதை ஒரு மருத்துவ பொருளாகவும், சர்க்கரைக்கு மாற்றாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.

ஏனெனில் இதில் ஏராளமான மருத்துவப்பயன்கள் நிறைந்துள்ளது.

அந்தவகையில் பனங்கருப்பட்டி சாப்பிடுவதனால் ஏற்படும் மருத்துவப்பயன்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • பனங்கருப்பட்டியில் இரும்பு மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

  • விட்டமின் ‘பி’ மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ள கருப்பட்டி நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது.

  • பருவமடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால் கருப்பை ஆரோக்கியமாக இருக்கும். நார்ச்சத்தும் இதில் அதிகம்.

  • குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும்.

  • கருப்பட்டி மற்றும் பனங்கற்கண்டில் சுண்ணாம்பு விட்டமின்கள் மற்றும் மினரல்களும் உள்ளன.

  • கருப்பட்டி இயற்கையிலேயே உடலைக் குளிர்ச்சியடையச் செய்யும். வெள்ளைக் சர்க்கரைக்கு பதில் இதனை பயன்படுத்துவதால் இது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

  • கருப்பட்டி ரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு சுறுசுறுப்பை கொடுக்கிறது.

  • சீரகத்தை வறுத்து கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும். ஓமத்துடன் சாப்பிட்டால் வாயுத்தொல்லை நீங்கும்.

  • உணவில் கருப்பட்டியை பயன்படுத்தினால் பற்களும், நரம்புகளும் உறுதியாகும்.

  • நீரிழிவு நோயாளிகள் கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டி கலந்து சாப்பிட்டு வர சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன் அடிக்கடி சிறுநீர் போவது குறையும்.

  • சுக்கு, மிளகு கலந்து கருப்பட்டியை பிரசவித்த பெண்கள் சாப்பிட்டால் தாய்ப்பால் நன்றாக சுரக்கும், குழந்தைக்கும் நல்ல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...