குழந்தைகளில் நிலக்கடலை ஒவ்வாமை நோய்: முதலாவது மாத்திரைக்கு அனுமதி வழங்கியது FDA

Report Print Givitharan Givitharan in மருத்துவம்

உலகெங்கிலும் பல மில்லியன் வரையான குழந்தைகள் நிலக்கடலை ஒவ்வாமை நோய்க்கு ஆளாகின்றனர்.

அமெரிக்காவில் மாத்திரம் ஒரு மில்லியன் வரையான குழந்தைகள் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் குறித்த நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கான மாத்திரை உருவாக்கப்பட்டுள்ளது.

இதனை குழந்தைகள் பயன்படுத்துவதற்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மாத்திரை கட்டுப்பாட்டுச் சபை அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி நான்கு வயது தொடக்கம் 17 வயது வரையானவர்கள் இதனை பயன்படுத்திக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நிலக்கடலை ஒவ்வாமைக்கு எதிராக பயன்படுத்தப்படும் குறித்த மாத்திரைக்கு Palforzia என பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...