ஆரோக்கிய வாழ்விற்கு பயன்தரும் சித்த மருத்துவ குறிப்புகள் இதோ!

Report Print Kavitha in மருத்துவம்

சித்த மருத்துவம் என்பது சித்தர்களால் உருவாக்கப்பட்ட ஒரு அற்புதமான மருத்துவம் ஆகும்.

தமிழ்நாட்டுப் பண்டைச் சித்தர்கள் தனது ஆய்வின் மூலமாக நோய்களை எப்படி இயற்கை முறையில் தீர்க்கலாம் என சக நோய்களுக்கும் மருந்து தயாரித்துள்ளார்.

இதன் அடிப்படையில் நமது உடல் வரும் சின்ன சின்ன நோய்களுக்கு சித்தமருத்துவத்தில் என்ன மருந்து உள்ளது என இங்கு பார்ப்போம்.

  • வெறும் வயிற்றில் இஞ்சி சாறில் தேன் கலந்து பருகினால் சோர்வு நீங்கும், மார்புச் சளி அகலும்.

  • புதினா கீரையை நீரில் போட்டு கொதிக்க வைத்து டீ டிகாஷன் போல் செய்து சாப்பிட்டால் சளியால் வரும் காய்ச்சல் குணமாகும்.

  • பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பு போகும்.

  • பூண்டை தோல் உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு,தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சூப் செய்து குடித்தால் சளி சீக்கிரம் குணமாகும்.

  • வெள்ளைப் பூண்டு, இஞ்சி சாறு இரண்டையும் சேர்த்து அரைத்து இதனுடன் தேன் கலந்து காலை மாலை உணவுக்கு முன் சாப்பிட்டால் டான்சில் கரையும்.

  • வயிற்றுப் போக்குக்கு சிறிது கசகசாவுடன் நாட்டுச் சர்க்கரையை சேர்த்து வாயில் போட்டு சாப்பிடவும். இது போல் வெறும் வயிற்றில் காலை மட்டும் சாப்பிட்டு வந்தால் மூன்று நாளில் குணமாகும்.

  • வாயுக் கோளாறுக்கு மிளகைப் பொடி செய்து பெருங்காய பவுடர் சேர்த்து தினமும் சுடுநீரில் கலந்து ஒரு தேக்கரண்டி சாப்பிட்டால் வாயுக் கோளாறு நீங்கும்.

  • தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...