பூமியின் கற்பக விருட்சமாக கருதப்படும் பனை மருத்தின் மருத்துவ பயன்கள்

Report Print Gokulan Gokulan in மருத்துவம்

பனை மரத்தின் பெருமையை வள்ளுவர் தன் திருக்குறளில் விளக்கியுள்ளார். சிலப்பதிகாரத்திலும் பனைமரத்தின் சிறப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இயற்கையாகவே பனை மரம் 30 அடி வரை வளரக்கூடிய தன்மை கொண்டது. பழங்கால மனிதர்கள் வீட்டுக்கு வீடு பனை மரத்தை வளர்ப்பதை கடமையாகவே கருதினர்.

உலக மக்கள் எழுத்தறிவு பெற்றதும் பல்வேறு பொருட்களை பயன்படுத்தினர். ஆனால், நம் முன்னோர்கள் பனை ஓலைகளில் மூலிகை திரவம் தடவி பதப்படுத்தி பனைப்பட்டையாக எழுத்து பணிகளுக்கு பயன்படுத்தினர்.

உ.வே.சாமிநாத அய்யர் நூற்றுக்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகளை நூலாக மாற்றியதோடு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏடுகளை சேகரித்துள்ளார்.

பனை மரத்தை அடிப்படையாக கொண்டு தமிழகத்தில் பல தொழில்கள் நடைபெற்று வருகின்றன.

பனை மரத்திலிருந்து கிடைக்கும் பதனீர் பலவிதமான நோய்களை குணப்படுத்துகிறது.

பனை மரத்தால் கிடைக்கும் பலன்கள்

பனங்கற்கண்டு

பனங்கற்கண்டில் கால்சியம் நிறைந்துள்ளது. தினமும் பனங்கற்கண்டை சாப்பிட்டு வந்தால், தோல் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தும்.

பாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்தால் சளி தொல்லை நீங்கும்.

பனங்கற்கண்டை சாப்பிட்டு வந்தால் தொண்டைப் புண் குணமாகும்.

மலச்சிக்கல், வயிற்றுப் புண்களை சரிசெய்யும்.

நுங்கு

 • வெயில் காலத்தில் நம்மை பாதுகாக்க இயற்கை கொடுத்துள்ள வரப்பிரசாதம் நுங்கு.
 • நுங்கை தொடர்ந்து சாப்பிட்டால் உடலில் உள்ள கொழுப்பை கட்டுப்படுத்தி, உடல் எடையை குறைக்கும் தன்மை கொண்டது.
 • உடல் உஷ்ணத்தை குறைக்கக்கூடியது.
 • நுங்கில் ‘ஆந்த்யூசைன்’ என்னும் ரசாயனம் இருப்பதால் பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோய் கட்டிகள் வருவதை தடுக்கும்.
 • நுங்கை முகத்தை தேய்த்து அரை மணி நேரம் கழித்து முகத்தை கழுவினால் முகம் பளபளவென்று பிரகாசிக்கும்.
 • வெயில் காலங்களில் ஏற்படும் உடலில் ஏற்டும் வியர்வை கட்டிகளின் மீது நுங்கின் சாற்றை தடவி வந்தால் வியர்வை கட்டிகள் சரியாகும்.

பனம் பழம்

 • பனம் பழம் மிகுந்த சுவை கொண்டது. 2 அல்லது 3 கொட்டைகள் பனம் பழத்தில் இருக்கும்.
 • பனம் பழத்தில் நிறைய நார்கள் இருக்கும். மஞ்சள் அல்லது சிவப்பு நிறத்தில் கொட்டியான சாறு கலந்திருக்கும்.
 • பனம்பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. பார்வை திறனை அதிகரிக்கும் வைட்டமின் ஏ சத்து அதிகளவில் உள்ளது.
 • பனம் பழத்தை நெருப்பு மூட்டி சுட்டு சாப்பிடுவார்கள்.
 • பனம் பழத்தில் பனியாரம் செய்யலாம்.

பதனீர்

 • பதனீர் உடல் ஆரோக்கியத்தை காக்கும் ஊட்டச்சத்து பானம்.
 • பதனீரில் காரத்தன்மை, சர்க்கரை சத்து, சுண்ணாம்பு சத்து, இரும்புச் சத்து, பாஸ்பரஸ், தயாமின், ஆஸ்கார்பிஸ் அமிலம், புரதச்சத்து அதிகமாக உள்ளது.
 • பதனீர் குடித்தால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

பனங்கிழங்கு

 • பனங்கிழங்கு கிருமி நாசியாக பயன்படுகிறது.
 • பனங்கிழங்கில் பல மருத்துவக் குணங்கள் உள்ளன. குளிர்ச்சித்தன்மை கொண்டவை.
 • மலச்சிக்கல் உள்ளவர்கள் பனங்கிழங்கை வேகவைத்து, வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு இடித்து சாப்பிட்டால் பிரச்சினை சரியாகும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்