தோல் நோய்கள் நீங்க இதோ எளிய பாட்டி வைத்தியம்!

Report Print Kavitha in மருத்துவம்
1249Shares

பொதுவாக கோடைக்காலம் வந்துவிட்டாலே போதும் தோல் நோய்கள் ஏற்படுவது சகஜம்.

தோலில் ஏற்படும் பூஞ்சை தொற்று, அலர்ஜி, நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு போன்ற பல காரணங்களால் தோல் நோய்கள் ஏற்பட கூடும்.

இது ஒரு தொற்று நோய் என்பதனால் பிறரது சோப்பை உபயோகிப்பது பிறரது துணியை அல்லது துண்டை உபயோகிப்பது போன்ற பல காரணங்களால் பரவுகின்றது என்று சொல்லலாம்.

அந்தவகையிலில் இது போன்ற தோல் நோய்களில் எளிதில் விடுபட சில சித்த மருத்துவங்கள் உதவி புரிகின்றது. தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.

  • 15 முதல் 20 குப்பைமேனி இலைகளை எடுத்துக்கொண்டு அதோடு அரை டீ ஸ்பூன் மஞ்சள் சேர்த்து நன்கு இடித்து இரும்பு சட்டியை அதில் இரண்டு டீ ஸ்பூன் தேங்காய் எண்ணெயை விட்டு அதில் நாம் இடித்துவைத்துள்ள மூலிகையை போட்டு சிறிது நேரம் நன்கு வதக்கி ஆற வைத்து உடலில் எங்கெல்லாம் சொறி, அரிப்பு போன்றவை உள்ளதோ அந்த இடங்களில் இதை ஒரு வாரம் தடவி வந்தால் சரியாகும்.
  • கீழாநெல்லி இலையை நன்கு அரைத்து உடலில் எங்கெல்லாம் அரிப்பு ஏற்படுகிறதோ அங்கெல்லாம் பூசிக்கொண்டு 5 நிமிடம் கழித்து குளித்து வந்தால் அரிப்பு சரியாகும். அதேபோல தோலில் ஏதாவது புண் இருந்தலும் இந்த மூலம் குணமாகும்.
  • கீழாநெல்லி மற்றும் கொத்துமல்லி இலை ஆகிய இரண்டையும் பால் விட்டு அரைத்து தேம்பல் இருக்கும் இடங்களில் பூசி பதினைந்து முதல் 30 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் தேமல் குணமாகும். அதே போல மலைவேம்பு சாறை பிழிந்து தேம்பல் இருக்கும் இடத்தில் விட்டால் தேமல் குணமாகும்.
  • உடலில் உள்ள அரிப்பு மற்றும் தடிப்புகள் சரியாக தினமும் காலை மாலை என இரு வேளையும் கருந்துளசியோடு 3 மிளகு சேர்த்து சாப்பிடலாம். இதன் மூலம் அரிப்பு மற்றும் தடிப்பு சரியாகும்.
  • ஒரு பாத்திரத்தில் சிறிதளவு நல்லெண்ணெய் விட்டு அதில் நசுக்கிய பூண்டை போட்டு நன்கு வதக்கவும். பிறகு இதை ஆறவைத்து வடிகட்டி ஒரு பாட்டிலில் சேமித்து வைத்துக்கொண்டு காலை மாலை என இருவேளையும் படர்தாமரை இருக்கும் இடத்தில் தேய்த்து பதினைந்து நிமிடங்கள் கழித்து குளித்துவந்தால் படர்தாமரை நீங்கும்.
  • முருங்கை இலையை பறித்து அதில் இருந்து நன்கு சாறு பிழிந்து அதோடு சிறிதளவு உப்பு சேர்த்து படை இருக்கும் இடத்தில் தினமும் இரண்டு வேலை தடை வந்தால் படை குணமாகும்.
  • வெற்றிலை மற்றும் துளசி இலையை சேர்த்து நன்கு அரைத்து தேமல் இருக்கும் இடத்தில் தடவி வந்தால் தேமல் நீங்கும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்