நெஞ்செரிச்சலை தடுக்க இதோ வழிகள்

Report Print Gokulan Gokulan in மருத்துவம்

வயிற்றிலிருக்கும் அமிலம் உணவுக்குழாயின் மேல் எழும்பும் போது ஏற்படும் நெஞ்செரிச்சலே அசிடிட்டி என்று சொல்லப்படுகிறது. அடிக்கடி அசிடிட்டி ஏற்படுபவர்களுக்கு அது நோயாக மாறிவிடுகிறது. அதை சரியாக கவனிக்காவிட்டால் ஆபத்தும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

நேரத்திற்கு சரிவர சாப்பிடாமல் விட்டாலோ, புகைப்பிடித்தாலோ, போதிய உடற்பயிற்சி செய்யாமல் இருந்தாலோ அடிக்கடி அசிடிட்டி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. கரிப்பிணிகள் மற்றும் உடற்பருமன் உள்ளவர்களுக்கும் அசிடிட்டி ஏற்படும் வாய்ப்புகள் அதிகவே உள்ளது.

உணவு மாற்றங்களை கொண்டு வந்தாலே இந்த அசிடிட்டி பிரச்சினையிலிருந்து விடுபடலாம்.

  • பைக்கார்பனேட் அடங்கிய சூவிங் கம் சாப்பிடுவதன் மூலம் எச்சில் அதிகமாக ஊறி உணவுக்குழாய் வழியே செல்லும். உமிழ் நீரானது வயிற்று அமிலத்தை சுத்தம் செய்யும்.
  • கொழுப்பு சத்து மிகுந்த உணவுகள், கஃபீன், சோடா, புதினா, சிட்ரஸ் பழங்கள், தக்காளி, வெங்காயம் ஆகியவை குறைவாக உண்ண வேண்டும். நார்ச்சத்து மிகுந்த உணவுகள் அதிகம் எடுத்துகொண்டால் இந்த பிரச்சினையிலிருந்து விடுபடலாம். ஒருநாளைக்கு மூன்று வேளை உண்பதற்கு பதிலாக 4-5 வேளை பிரித்து சாப்பிட்டால் நல்லது.
  • செரிமானம் ஆகாத மாவுச்சத்துக்கள் பாக்டீரியா வளர வழிசெய்து விடும். இதனால் வயிற்றில் அழுத்தம் அதிகரித்து அமிலத்தன்மை ஏற்பட வாய்ப்பு உள்ளன. மாவுச்சத்து குறைவாக எடுத்துக்கொள்வதன் மூலம் அசிடிட்டி பிரச்சினையை தவிர்க்க முடியும்.
  • மது அருந்துதல் அமிலத்தன்மையை அதிகரிக்கும். நெஞ்செரிச்சலை அதிகரிப்பதுடன், உணவுக்குழாயில் இருந்து அமிலம் நீங்குவதை தவிர்த்து விடும். எனவே, மது அருந்துவதை முற்றிலுமாக தவிர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
  • அசிடிட்டி பிரச்சினை இருப்பவர்கள் உறங்க செல்வதற்கு முன் மூன்று மணிநேரம் முன்பாகவே உணவை சாப்பிடுவிட வேண்டும். தூங்கும் முன் சாப்பிட்டால் அமிலத்தன்மை அதிகரித்து அசிட்டியை ஏற்படுத்தி விடும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்