நோய் எதிர்ப்பு சக்தி தக்க வைக்கும் வெண்பூசணி! வேறு பல நன்மைகளையும் அள்ளி தருமாம்

Report Print Kavitha in மருத்துவம்

பூசணிக்காயில் மஞ்சள் நிறமுள்ள கல்யாண பூசணியும், வெண்மை நிறமுள்ள பூசணியும் காணப்படுகிறது.

இந்த இரண்டு பூசணிகளுமே உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.

அதில் இதில் செரிமானத்துக்கான நார்ச்சத்து, ஆன்டிஆக்சிடென்ட், தாதுச் சத்து மற்றும் வைட்டமின் ஆகியவற்றைக் கொண்டது.

குறிப்பாக இதில் வைட்டமின் ஏ, சி மற்றும் இ ஆகியவை அதிகம். உடலுக்குத் தேவையான இயற்கையான ஆன்ட்டி ஆக்சிடென்ட்டாக செயல்படுகிறது.

இது பல நோய்களுக்கு அருமருந்தாக திகழ்கின்றது. அந்தவகையில் தற்போது வெண் பூசணிக்காய் சாப்பிடுவதனால் ஏற்படும் பயன் என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • பூசணிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைக்க மிகவும் உதவும்.

  • புண்களை ஆற்ற, தழும்புகளை காணாமல் போகச் செய்யவும் பூசணிக்காய் பயன்படும்.

  • பூசணி அடிக்கடி உணவில் சேர்ப்பது நோய் எதிர்ப்பு சக்தியை தக்கவைக்கும்.

  • பூசணிக்காய் விரும்பி சாப்பிடுபவர்களுக்கு கண் பார்வை சிறப்பாக இருக்கும்.

  • உடற்பயிற்சி செய்துவிட்டு சாப்பிடும் உணவில் பூசணிக்காய் சேர்த்துக்கொள்வது எலெக்ட்ரோலைட் சமநிலைக்கு உதவும். காய்ச்சல் மற்றும் சளியை குணப்படுத்தவும் பூசணி மிகவும் ஏற்றது.

  • வெண்பூசணிக்காயின் சாறு 30 மில்லியளவு எடுத்து ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துச் சாப்பிட்டால் இதய பலவீனம் நீங்கும். ரத்தசுத்தியாகும்.

  • பெண்களின் வெள்ளைப் போக்கு நீக்கவும் வெண்பூசணி பயன்படுத்தப்படுகிறது.

  • நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலைசுற்றல் நீக்கப் பயன்படுகிறது.

  • ரத்த சுத்திக்கும், ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் உதவும்.

  • வெண்பூசணி நெய் அல்லது கூழ்பாண்ட கிருதம் என்ற இந்தப் பூசணி நெய்யைச் சாப்பிட்டு வந்தால் சூலை நோய்கள் நிவர்த்தியாகும்.

  • தோல் நோய்கள், பெண்குறிப் புற்று முதலியன நீங்கும். உடல் சூடு, சூட்டுடன் எரிச்சல், நீர்க்கட்டு, நீர்க்குத்து முதலியன ஆண்களுக்கும், பெண்களுக்கும் நிவர்த்தியாகும்.

  • அஸ்திவெட்டை, கிராணிக்கழிச்சல், எலும்புருக்கி முதலிய கொடிய நோய்கள் நிவர்த்தியாகும்.

  • சிறுநீரகம் சம்பந்தமான நோய் உள்ளவர்கள் பூசணிக்காய்ச் சாறு 120 மில்லியில் ஒரு தேக்கரண்டி சர்க்கரையும், இரண்டு தேக்கரண்டி தேனும் கலந்து சாப்பிட்டு வந்தால், நோய்கள் முழுமையாக நிவர்த்தியாகும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்