புற்றுநோய் செல்களை வேரோடு அழிக்கும் பழம்!

Report Print Nalini in மருத்துவம்

உருவு கண்டு எள்ளாமை வேண்டும் என்பார்கள். அதற்கான மிகச்சிறந்த உதாரணம் சப்போட்டா பழமாகும்.

இதன் தாவரவியல் பெயர், அக்ரஸ் சப்போட்டா என்பதாகும். இதன் தூய தமிழ்ப்பெயர், சீமை இலுப்பை என்று சொல்லப்படுகிறது.

உலக அதிசயங்களில் ஒன்றான சிச்சென் இட்சாவில், சப்போட்டா பயிரிடப்பட்டதற்கான அடையாளங்கள் கிடைத்துள்ளது.

வைட்டமின் சி மற்றும் ஏ, நார் சத்து, புரோட்டின், இரும்பு சத்து, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துகள் சப்போட்டா பழத்தில் உள்ளது.

சப்போட்டா பழத்தை அரைத்துச் சாற்றை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள், வயிற்று வலி ஆகியவை சரியாகும்.

சப்போட்டா பழம், வாழைப்பழம், மாம்பழம் சேர்த்து பொடியாக நறுக்கி இவற்றை ஒன்றாக கலந்து அரைத்து பஞ்சாமிர்தம் செய்து சாப்பிட உடலுக்கு வலிமையும் உறுதியைத் தரும்.

சப்போட்டா பழத்தைத் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குடல்புண், குடல் எரிச்சல், வயிற்றுவலி, வயிற்றெரிச்சலைப் போக்கிவிடும்.

சப்போட்டா பழத்தைத் தோல் நீக்கி அத்துடன் பால் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டுவர உடல் உஷ்ணத்தைத் தணிக்குமாம்.

சப்போட்டா பழத்திலுள்ள சில சத்துப்பொருட்களும், வைட்டமின்களும், இரத்த நாளங்களைச் சீராக வைக்கும் குணம் கொண்டவை. இவை, இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்க உதவி செய்கிறது.

சப்போட்டா பழத்தில் வைட்டமின் ஏ அதிக அளவு நிரம்பி உள்ளதால் நமது கண்களுக்கு நன்மை தருவதுடன் முதுமையை தள்ளிபோட வல்லது.

நாம் சுறுசுறுப்பாக நடந்து செல்ல நமக்கு மிகவும் அவசியமாக இருப்பது ஆற்றல். அந்த ஆற்றலை அதிகளவு கொண்டுள்ளது சப்போட்டா பழம். ஏனெனில் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கும் குளுக்கோசை கொண்டுள்ளன.

சப்போட்டாவில் உள்ள நார்சத்து மற்றும் ஊட்டச்சத்துகள் புற்றுநோய்க்கு எதிரான பாதுகாப்பை வழங்குகின்றன. அதாவது வாய் குழி புற்றுநோய், பெருங்குடல் சளி சவ்வை நச்சுகளிடமிருந்து பாதுகாக்க வைட்டமின் ஏ வை கொண்டு பாதுகாப்பு வழங்குகின்றது.

சப்போட்டா பழத்தை உட்கொண்ட பின்னர் ஒரு தேக்கரண்டி சீரகத்தை நன்கு மென்று விழுங்கினால் பித்தம் விலக்கி விடும். பித்தத்தை குணப்படுத்தும் சிறந்த மருந்தாக இது உதவி செய்யும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்