தலை முதல் கால் வரை!... அனைத்து நோய்களுக்குமான மருந்து- எந்த மூலிகை பொடி எதற்கு பயன்படும்?

Report Print Nalini in மருத்துவம்

இயற்கை நமக்கு மரங்கள், செடி, கொடிகள், காய், கனிகளை கொடுத்திருக்கிறது. இவை ஒவ்வொன்றும் மனிதனுக்கு ஆரோக்கியத்தை தரும்.

ஆனால் இன்றைய அவசர காலக்கட்டத்தில் மனிதன் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

உடலில் ஏதாவது ஒரு தலைவலியோ, சளி, இருமல் பிடித்தாலோ உடனே மருந்து கடைகளில் கிடைக்கும் மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறான்.

நாட்டு மருந்து கடைகளில் பல இயற்கை மருந்துகள் கிடைக்கின்றன. அந்த நாட்டு மருந்து கடைகளுக்கு யாரும் அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து செல்வதில்லை. ஆனால் இயற்கையான மருந்துகளில் தான் மனிதனுக்கு ஆரோக்கியம் அடங்கியுள்ளது.

உடல் வலிமையோடும், ஆரோக்கியத்தோடும இருக்க வேண்டும் என்று நினைத்தால், நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கப்பெரும் இயற்கை பொருட்களின் முக்கியத்துவத்தை இனிமேலாவது தெரிந்து கொள்ளுங்கள்.

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு பொடியும் மருத்துவ பொருளாகும். அதன் நன்மைகளையும், அதன் பயன்களையும் இப்போது பார்ப்போம்

அருகம்புல் பொடி - அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்திரிக்கும்.

நெல்லிக்காய் பொடி - பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” நிறைந்து காணப்படுகிறது.

கடுக்காய் பொடி- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாக செயல்படும்.

வில்வம் பொடி- அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்த மருந்தாக செயல்படும்.

அமுக்கரா பொடி- தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுகளை போக்கும்.

சிறுகுறிஞான் பொடி- சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகைபொடியாகும்.

நாவல் பொடி- சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்த மருந்து.

வல்லாரை பொடி- நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சியை போக்கும்.

தூதுவளை பொடி- நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்த மருந்து.

துளசி பொடி- மூக்கடைப்பு, சுவாச கோளாருகளை போக்கும்.

ஆவரம்பூ பொடி- இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாக மின்னச் செய்யும்.

கண்டங்கத்திரி பொடி- மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்து விளங்கும்.

ரோஜாபூ பொடி- இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியை தரும்.

ஓரிதழ் தாமரை பொடி- ஆண்மை குறைபாடுகளை போக்கும். மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளை படுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா.

ஜாதிக்காய் பொடி- நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி அதிகளவில் பெருக்கும்.

திப்பிலி பொடி- உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்த மருந்து.

வெந்தய பொடி- வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்களை குணமாக்கும்.

நிலவாகை பொடி- மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கி விடும்.

நாயுருவி பொடி- உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்த மருந்து.

கறிவேப்பிலை பொடி- கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.ரத்தம் முழுவதும் சுத்தமாகும். இரும்புச் சத்து நிறைந்து காணப்படும்.

வேப்பிலை பொடி- குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்த மருந்து.

திரிபலா பொடி- வயிற்று புண் ஆற்றும், அல்சரை கட்டுக்குள் கொண்டு வரும்.

அதிமதுரம் பொடி- தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாக்கும்.

துத்தி இலை பொடி- உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த மருந்து.

செம்பருத்திபூ பொடி- அனைத்து இருதய நோய்க்கும் சிறந்ததாகும்.

கரிசலாங்கண்ணி பொடி- காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்த பொடி.

சிறியா நங்கை பொடி- அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

கீழாநெல்லி பொடி- மஞ்சள் காமாலை, சோகை நோய்களை போக்கும்.

முடக்கத்தான் பொடி- மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது

கோரைகிழங்கு பொடி- தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பை தரும்.

குப்பைமேனி பொடி- சொறிசிரங்கு, தோல் வியாதிகளை போக்கும்.

பொன்னாங்கண்ணி பொடி- உடல் சூடு, கண்நோய்க்கு சிறந்த மருந்து.

முருங்கைவிதை பொடி- ஆண்மை சக்தி கூடும்.

லவங்கபட்டை பொடி- கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலியை போக்கும்.

வாதநாராயணன் பொடி- பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கி விடும்.

பாகற்காய் பொடி- குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் கொண்டு வரும்.

வாழைத்தண்டு பொடி- சிறுநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்த மருந்து.

மணத்தக்காளி பொடி- குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கி விடும்.

சித்தரத்தை பொடி- சளி, இருமல், வாயு கோளாறுகளை போக்கும்.

பொடுதலை பொடி- பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.

சுக்கு பொடி- ஜீரண கோளாறுகளுக்கு சிறந்த மருந்து.

ஆடாதொடை பொடி- சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்ததாகும்.

கருஞ்சீரகப்பொடி- சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

வெட்டி வேர் பொடி- நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவை கொடுக்கும்.

வெள்ளருக்கு பொடி- இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலியை போக்கிவிடும்.

நன்னாரி பொடி- உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சியை போக்கும்.

நெருஞ்சில் பொடி - சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கி விடும்.

பிரசவ சாமான் பொடி - பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்ததாகும்.

கஸ்தூரி மஞ்சள் பொடி- தினசரி பூசி வர முகம் பொலிவை தரும்.

பூலாங்கிழங்கு பொடி - குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

வசம்பு பொடி- பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கி விடும்.

சோற்று கற்றாழை பொடி - உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.

மருதாணி பொடி - கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் சரியாகும்.

கருவேலம்பட்டை பொடி - பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி சரியாகும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்