சொறி சிரங்கை எளிதில் போக்க வேண்டுமா? இதோ சில வீட்டு வைத்தியங்கள்

Report Print Kavitha in மருத்துவம்

சொறி சிரங்கு என்பது தொற்றக்கூடிய ஒரு சரும பாதிப்பாகும்.

இது சின்ன சின்ன பூச்சிகள் அல்லது சிற்றுண்ணிகள் போன்றவை சருமத்தின் ஆழத்தில் சென்று ஊடுருவுவதால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது.

இதனை எளிய முறையில் வீட்டு வைத்தியங்கள் கொண்டு சரி செய்ய முடியும். தற்போது அவை என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.

  • வேப்பிலை மற்றும் மஞ்சள் அடங்கிய பேஸ்ட் சிரங்கை போக்க உதவி செய்யும். வேப்ப எண்ணெய் கூட உங்க சருமத்திற்கு நிவாரணம் அளிக்கும்.

  • கிராம்பு எண்ணெய்யை தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து நீர்த்துப் போகச் செய்து மட்டுமே அப்ளே செய்ய வேண்டும். கிராம்பு எண்ணெய்யை தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து குளிக்கும் போது தோலில் தடவி வர வேண்டும். இதை 2-3 வாரங்களுக்கு செய்யும் போது நல்ல பலன் கிடைக்கும்.

  • ஒரு தேக்கரண்டி மஞ்சளுக்கு சில துளிகள் லெமன் சாற்றை கலந்து மென்மையான பேஸ்ட்டாக்கி பேஸ்ட்டை சிறுது நேரம் அப்படியே விட்டு விட்டு கழுவி வாருங்கள்.வேப்ப எண்ணெய்யுடன் மஞ்சள் கலந்து தடவும் போது சொறி சிரங்கு சரியாகிவிடும்.

  • ஒரு பாத்திரத்தில் சமஅளவு வொயிட் வினிகர் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும். பாதிக்கப்பட்ட தோலில் இந்த கலவையை தடவி சில நிமிடங்கள் விட்டு விடுங்கள். பிறகு சாதாரண நீரில் கழுவுங்கள். தொற்றுநோயை முழுமையாக எதிர்த்து போராட 10-15 நாட்களுக்கு தினமும் மூன்று முறை இதை செய்து வாருங்கள்.

  • சிரங்கு நோயை குணப்படுத்த பாதிக்கப்பட்ட சருமத்தில் புதிய கற்றாழை ஜெல்லை தடவ வேண்டும். அரை மணி நேரம் ஊற விட்டு பிறகு சாதாரண நீரில் கழுவுங்கள். இதையே சில நாட்களுக்கு 2-3 முறை செய்து வாருங்கள். உங்க சரும நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

  • நான்கு பங்கு தண்ணீருடன் ஒரு பங்கு ப்ளீச் சேர்த்து பாதிக்கப்பட்ட பகுதியில் தினமும் இரண்டு முறை தெளிக்க வேண்டும். சில நாட்களுக்கு இதை செய்து வாருங்கள்.

  • தயிர் மற்றும் மீனை உங்க உணவில் சேர்த்து வரும் போது அரிப்பு, சரும வடுக்கள் வராமல் தடுக்கும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்