நம் உடலில் இந்த உறுப்புக்கள் இல்லாவிட்டாலும் நம்மால் வாழ முடியும்? அது எந்த உறுப்புகள் தெரியுமா?

Report Print Nalini in மருத்துவம்
1275Shares

உடலில் உள்ள அனைத்து உறுப்புக்களும் வெவ்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் மட்டுமில்லை. ஒவ்வொன்றின் தேவையும், அவசியமும் தான் வேறுபட்டுள்ளன. உதாரணத்திற்கு நம் உடலில் அப்பெண்டிக்ஸ் என்னும் உறுப்பு உள்ளது. இதை நீக்கிவிட்டால் கூட எந்த ஒரு ஆபத்தும் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

இது போன்று நம் உடலில் உள்ள பல உள்ளுறுப்புக்கள் இல்லாமலும் நம்மால் உயிர் வாழ முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இங்கு நம் உடலில் எந்த உறுப்புக்கள் இல்லையென்றாலும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும்.

அதைப் பற்றி இப்போது நாம் பார்ப்போம்

ஒரு நுரையீரல்

நாம் அனைவரும் இரண்டு நுரையீரல் இருந்தால் தான் உயிர் வாழ முடியும் என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் மனிதன் உயிர் வாழ ஒரே ஒரு நுரையீரல் போதும். என்ன. இரண்டு நுரையீரல் பிரித்து செய்யும் வேலையை ஒரே ஒரு நுரையீரல் செய்ய வேண்டியிருக்குமாம். மேலும் ஒரே ஒரு நுரையீரல் கொண்டவர்களால், மிகவும் கடினமான செயல்களை செய்ய கஷ்டமாக இருக்கும்.

ஒரு சிறுநீரகம்

தற்போது பலருக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்படும். அதில் ஒரு சிறுநீரகம் பாதிக்கப்பட்டால் பரவாயில்லை. எஞ்சிய ஒரு சிறுநீரகத்தைக் கொண்டே ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும். எனவே ஒரு சிறுநீரகம் கொண்டு உயிர் வாழ முடியுமா என்ற சந்தேகமே உங்களுக்குத் தேவை கிடையாது.

பெருங்குடல்

ஒருவரது உடலில் பெருங்குடல் நீக்கப்பட்டால், அந்நோயாளியின் உடலில் கழிவுகளை சேகரிக்க வெளிப்பகுதியில் ஒரு பை பொருத்தப்படும். மேலும் பெருங்குடன் நீக்கப்பட்டவர்களது உடலில் கழிவுகள், ஆசனவாய் நோக்கி செல்லாமல், நேரடியாக பையில் சேகரிக்கப்படுமாம். இப்படி பெருங்குடல் நீக்கப்பட்டவர்கள், இனிமேல் உணவுப் பழக்கவழக்கத்தில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை. எப்போதும் போன்று வாழ்க்கையை நாம் வாழலாம்.

அந்தரங்க உறுப்புகள்

அந்தரங்க உறுப்புக்கள் மிகவும் அவசியமானது தான். ஆனால் அவைகள் இல்லாமலும் உயிர் வாழ முடியும். உதாரணமாக, ஒரு பெண்/ஆணுக்கு அந்தரங்க உறுப்புகளில் புற்றுநோய் வந்தால், சிகிச்சை அளிக்கும் போது விதைப்பை/கருப்பையையே நீக்க வேண்டியிருக்கும். இதற்கும் உயிருக்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது.

தைராய்டு சுரப்பி

கழுத்தில் அமைத்துள்ள முக்கிய சுரப்பியான தைராய்டு, வளர்ச்சி, மெட்டபாலிசம் மற்றும் இதர செயல்பாடுகளுடன் முக்கிய பங்கை வகிக்கும். இந்த தைராய்டு சுரப்பியில் இருந்து ஹார்மோன் கட்டுப்பாடின்றி அளவுக்கு அதிகமாக சுரக்கப்பட்டால், அதற்கு சிகிச்சை அளிக்க தைராய்டு சுரப்பி நீக்கப்படும். இதனால் உயிருக்கு எந்த ஆபத்தும் கிடையாது.

மண்ணீரல்

மண்ணீரல் கடுமையாக பாதிக்கப்பட்டால், அதனை நீக்க வேண்டி வரும். மண்ணீரலை நீக்கினால் ஆபத்து உண்டோ என்று பலரும் அஞ்சுவார்களாம். ஆனால் மண்ணீரல் செய்யும் பெரும்பாலான செயல்பாட்டை இதர உறுப்புக்கள் செய்வதால், இதன் அவசியம் தேவையில்லை. மண்ணீரல் உடலுக்கு பாதுகாப்பை வழங்கும் பணியை செய்வதால், இதனை நீக்கிய பின், அந்நோயாளி கடுமையான நோய்த்தொற்றால் அவஸ்தைப்படக்கூடுமாம். இதனைத் தடுப்பதற்கு தடுப்பூசிகளை அவ்வப்போது போட்டுக் கொள்ளலாம்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்