உடம்பில் தேங்கியுள்ள கெட்ட நீரை வெளியேற்றும் சில எளிய இயற்கை வழிகள் இதோ!

Report Print Kavitha in மருத்துவம்
1215Shares

உங்கள் முகம், கால்கள் மற்றும் கைகள் வீங்கி காணப்பட்டால், உங்கள் உடலில் கெட்ட நீர் தேங்கி, நீர் எடையைப் பெற்றுள்ளீர்கள் என்று அர்த்தம்.

இவை தவறான மருந்துகள், மாதவிடாய் மற்றும் கர்ப்ப காலங்களில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், அதிகளவிலான சோடியம் அல்லது சர்க்கரை, பூச்சிக்கடி அல்லது உணவால் ஏற்படும் அழற்சி போன்றவற்றால் ஏற்படலாம்.

ஒருசில இயற்கை உணவுகளால் உடலில் தேங்கியுள்ள நீரின் எடையைக் குறைக்க முடியும். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • உணவு உண்ட பின் ஒரு துண்டு டார்க் சாக்லேட் சாப்பிடுவது நல்லது. ஏனெனில் டார்க் சாக்லேட்டில் உள்ள கொக்கோ உள்ளது. கொக்கோவில் காப்ஃபைன் என்னும் டையூரிக் உள்ளது. இது உடலில் தேங்கியுள்ள அதிகப்படியான நீரை வெளியேற்ற உதவுகிறது.

  • ஒரு டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு டம்ளர் நீரில் கலந்து, மதிய உணவு உண்ட பின் குடியுங்கள். இதனால் உடலில் உள்ள அதிகப்படியான கெட்ட நீர் வெளியேற்றப்பட்டு, உடல் எடை குறையும்.

  • அஸ்பாரகஸில் உள்ள அஸ்பாரகைன்கள் சிறுநீரகங்களை சுத்தம் செய்ய உதவுவதுடன், நீர் எடையைக் குறைக்கவும் உதவுகிறது.

  • முட்டைக்கோஸை அரைத்து சாறு எடுத்து, அதில் சுவைக்காக சிறிது உப்பு மற்றும் மிளகு சேர்த்து, மதிய உணவுக்கு முன் குடிக்க வேண்டும். இதனால் உடலில் உள்ள கொழுப்புக்கள் மற்றும் உடலில் தேங்கியுள்ள அதிகப்படியான நீர் வெளியேறும்.

  • கேரட் நீண்ட நேரம் பசி எடுக்காமல் வயிற்றை நிரப்பி வைத்திருக்கும். மேலும் இது உடலின் மெட்டபாலிச செயல்முறையை வேகப்படுத்தவும், அதிகப்படியான கொழுப்பு மற்றும் நீரை நீக்கவும் உதவுகிறது. ஆகவே உடலில் உள்ள கெட்ட நீர் சீக்கிரம் வந்துவிடும்.

  • ஒரு டம்ளர் நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க ஆரம்பித்ததும், அதில் ஒரு துண்டு பட்டை அல்லது 1 டீஸ்பூன் பட்டை பொடி சேர்த்து 15 நிமிடம் மூடி வைக்க வேண்டும். பின் அந்த டீயைக் குடிக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 1 அல்லது 2 முறை குடித்தால், ஒன்று அல்லது இரண்டு வாரத்தில் எடையில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

  • ஒரு கப் சுரைக்காய் ஜூஸில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, காபி, டீ குடிக்கும் நேரத்தில் குடியுங்கள். இது இது பசியுணர்வைக் குறைப்பதோடு, நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும் மற்றும் உடலை வறட்சியடையாமல் நீர்ச்சத்துடன் வைத்துக் கொள்ளும்.

  • நீர் உடம்பு உள்ளவர்கள் தினமும் ஒரு டம்ளர் நீரில், பாதி எலுமிச்சையைப் பிழிந்து, அத்துடன் சிறிது மிளகுத் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த ஜூஸை மதிய உணவு உண்ட பின் குடிக்க வேண்டும்.

  • நாள் முழுவதும் சோம்பு போட்டு கொதிக்க வைத்த நீரை குடித்து வந்தால், உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும். இருப்பினும், ஒரு நாளைக்கு 1 லிட்டருக்கும் அதிகமாக சோம்பு நீரைக் குடிக்காதீர்கள்.

  • ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் சிறிது ரோஜாப்பூ இதழ்களைப் போட்டு 15 நிமிடம் குறைவான தீயில், ரோஜா இதழ்கள் நிறத்தை இழக்கும் வரை கொதிக்க வைக்க வேண்டும். பின் அந்த நீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் 100 மிலி குடிக்க வேண்டும். இதனாலும் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்