வயிற்றில் வளரும் புழுக்களை அழித்து வயிற்றை சுத்தமாக்கனுமா? இதோ சில எளிய வீட்டு வைத்தியமுறைகள்

Report Print Gokulan Gokulan in மருத்துவம்

பொதுவாக நம் குடல் பகுதியில் புழுக்கள் இருந்தாலே வயிற்றில் அடிக்கடி வலி ஏற்படும்.

அதுமட்டுமின்றி குமட்டல்,பசியின்மை,செரிமானமின்மை ,மெலிந்துபோதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

புழுக்கள் நம் உடலில் உள்ள புரோட்டின் சத்துக்கள் அனைத்தையும் சாப்பிட்டுவிடும். இதனால் சத்துக்குறைவு ஏற்படும்.

எனவே இந்த புழுக்களை வெளியேற்ற சில எளிய வீட்டு வைத்தியமுறையை பார்ப்போம்.

  • 2 தேக்கரண்டி பூசணி விதையை வெறும் வானலியில் 2 நிமிடம் வறுத்துக்கொள்ளுங்கள்.வறுத்த விதைகளை மிக்சியில் அரைத்துக்கொள்ளுங்கள். பின் 1 தேக்கரண்டி அரைத்த பூசணி பொடியில் 1 தேக்கரண்டி தேன் கலந்து இரவு சாப்பாட்டிற்கு பின் தொடர்ந்து 3 நாட்கள் சாப்பிடவேண்டும்.இவ்வாறு 6 மாதத்திற்கு ஒரு முறை சாப்பிட்டு வரவேண்டும்.

  • மறுநாள் காலை 1 டம்ளர் வெந்நீரில் 1 தேக்கரண்டி விளக்கெண்ணெய் சிறிதளவு உப்பு சேர்த்து வாரத்தில் ஒரு முறை குடிக்கவேண்டும்.இவ்வாறு செய்தால் வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறிவிடும்.

  • வெங்காய சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் சிறிது குடிக்க வேண்டும். இப்படி செய்வதால் வயிற்றில் உள்ள ஒட்டுண்ணிகள் அழித்து வெளியேறிவிடும்.

  • மாதுளையின் தோலை உலர வைத்து, அரைத்து பொடி செய்து, அதில் சிறிது தேன் கலந்து உட்கொண்டு வர, வயிற்றில் உள்ள புழுக்களின் வளர்ச்சி தடுக்கப்பட்டு, அவை அழிந்து வெளியேறும்.

  • தினமும் பச்சை பூண்டை 3-4 உட்கொண்டு வர வேண்டும். இப்படி செய்வதால் வயிற்றை சுத்தமாக வைத்துக் கொள்ள முடியும்.

  • பாகற்காயை சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு டம்ளர் மோரில் 1 டேபிள் ஸ்பூன் பாகற்காய் சாற்றினை சேர்த்து கலந்து, அவ்வப்போது குடித்து வர, வயிற்றில் புழுக்கள் வளர்வதைத் தடுக்கலாம்.

  • எலுமிச்சையின் விதைகளை அரைத்து பேஸ்ட் செய்து, 1 டம்ளர் நீரில் கலந்து, அத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றினையும் சேர்த்து கலந்து வாரம் ஒருமுறை குடித்து வர, குடல் புழுக்களை முற்றிலும் வெளியேற்றி, வயிற்றை சுத்தமாக வைத்துக் கொள்ளலாம்.

  • 1 டேபிள் ஸ்பூன் அசிட்டிக் ரைஸ் வினிகரை 1 டம்ளர் நீரில் கலந்து, குடிப்பதன் மூலமும் வயிற்றில் வளரும் புழுக்களை அழிக்கலாம். அதிலும் இச்செயலை ஒரு நாளில் 3-4 டம்ளர் என வாரம் ஒருமுறை குடித்து வர, வயிறு சுத்தமாக புழுக்களின்றி இருக்கும்.

  • தினமும் 1-2 கிராம்பை உட்கொண்டு வர, அதில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் தன்மையினால், புழுக்கள் வெளியேறிவிடும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்