இந்த பழத்தின் கொட்டையிலும் நன்மைகள் இருக்கு! தெரிந்து கொள்வோம்

Report Print Nalini in மருத்துவம்
1172Shares

அவகேடா பழத்தில் கொழுப்புச்சத்து, மக்னீசியம், பொட்டாசியம், விட்டமின் C, K, B6 மற்றும் கார்போஹைட்ரேட் போன்ற சத்துக்கள் அடங்கி இருக்கின்றன.

அவகேடோ பழ கொட்டையின் நன்மைகள்

  • புற்றுநோய் தாக்கியவர்களுக்கு அவகோடா பழம் அதிகமாக கொடுத்தால் அது நோய் எதிர்ப்புத்தன்மையை அதிகரிக்கும். இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளை கட்டுப்படுத்த உதவும்.
  • அவகேடோவில் உள்ள கேட்டசின்கள் மற்றும் ப்ரோசியானிடின்ஸ், சக்தி வாய்ந்த ஆன்டி – இன்ஃப்ளமேட்டரிகளாக செயல்பட்டு முட்டி வலி மற்றும் வீக்கத்தை குறைக்க உதவி செய்யும்.
  • உடலில் சர்க்கரையின் அளவினைக் கட்டுப்படுத்துகின்றது. செரிமான பிரச்சினைகளையும் சரிசெய்யக்கூடியது. மேலும் இரைப்பை குடல் பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.
  • அவகேடோவின் கொட்டையில் ஃப்ளேவனால் நிறைந்து உள்ளது. அதனால் அது நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, காய்ச்சல் மற்றும் சளி தொல்லைகள் வராமல் பாதுகாக்கும்.
  • வலிப்பு நோய், வயிற்றுப்போக்கு, மனச்சோர்வு, தசைகளின் சோர்வு மற்றும் வலி, கட்டிகளின் வளர்ச்சி ஆகிய பிரச்சனைகள் வராமல் தடுத்துவிடும்.
  • கெட்ட கொழுப்புகளை குறைத்து நல்ல கொழுப்புகளின் அளவை அதிகரிக்க செய்து உடற்பருமன் ஏற்படுவது தடுக்கப்படும்.
  • இரத்த அழுத்த பிரச்னையால் அவதிப்படுபவர்களுக்கு மிகச் சிறந்ததாகும். இதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
  • அவகோடா பழத்திலுள்ள சேர்மங்கள் எலும்புகள் வலிமையடைகின்றன.கண்களின் பார்வை திறன், புரை வளர்தல் ஆகியவை கட்டுப்படுத்த உதவும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்