நீரிழிவு நோயாளிகள் வெந்தையக்கீரையை சாப்பிட்டால் நன்மையா?

Report Print Nalini in மருத்துவம்
386Shares

உலகத்திலேயே இந்தியாவில் தான் வெந்தயம் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

வளமான மண்ணில் வெந்தய விதையை விதைத்தால், ஈரப்பதம் கிடைத்தவுடன் செடி முளைக்க ஆரம்பித்து விடும். இச்செடிக்கு தண்ணீர் தேங்கக்கூடாது.

வெந்தயக்கீரை என்பது முளைத்து வளர்ந்துள்ள சுமார் 3 அங்குலம் உயரமுள்ள வெந்தயத்தையே குறிப்பதாகும். வெந்தயக்கீரையானது வெந்தயத்திற்கான அனைத்து நற்குணங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளன. வெந்தயக்கீரை மேலும் உடலுக்கு குளிர்ச்சியூட்டக் கூடியவை.

சாதாரணமாக நினைத்த வெந்தையக்கீரையில் நீரிழிவு நோயாளிகளை குணப்படுத்தும் மருந்துப்பொருள் காணப்படுவதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

வெந்தையக்கீரையினை ஹிந்தியில் மேத்தி கசூரி என்று அழைப்பர். வெந்தயக்கீரை நறுமணத்திற்காக உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படுகின்றன.

வெந்தையக்கீரையில் வைட்டமின் சியும், வைட்டமின் ஏ யும் காணப்படுகின்றது. இது நார்ச்சத்துள்ள உணவுப்பொருள் என்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகச் சிறந்தது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

வெந்தயக் கீரையின் பயன்கள்

  • வெந்தயக் கீரை டைப் 1 டைப் 2 நீரிழிவினை கட்டுப்படுத்துக்கின்றன. உடலில் அதிக கொழுப்புச் சத்து தங்கவிடாமல் இந்த வெந்தயக் கீரை தடுக்கிறது.
  • நீண்ட நேரம் அமர்ந்திருந்து வேலை செய்ய முடியாமல் இடுப்பு வலிப்பவர்கள் வெந்தயக் கீரையுடன் கோழி முட்டை மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்து நெய்யில் வேக வைத்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி சரியாகிவிடும்.
  • வெந்தயக் கீரை அரைத்து நெய் சேர்த்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் தொண்டைப்புண், வாய்ப்புண் முற்றிலும் குணமாகும்.
  • இந்தக் கீரையைத் தொடர்ந்து 40 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுக்குள் வரும். எனவே, நீரிழிவு உள்ளவர்கள் வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிடுவது மிகவும் சிறந்தது.
  • வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டால் காசநோய் குணமாகும். இந்தக் கீரை வயிற்று நோய்களை சரிசெய்யும்.
  • வெந்தயக்கீரையை வெண்ணெயிட்டு வதக்கி உண்டால் பித்தக் கிறுகிறுப்பு, தலை சுற்றல், வயிற்று உப்பிசம், பசியின்மை, ருசியின்மை ஆகியவை சரியாகும். உடல் சூடு தணியும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்