சரியாக தூங்கவில்லையென்றால் வரும் பக்கவிளைவுகள்

Report Print Nalini in மருத்துவம்
424Shares

சரியான தூக்கம் இல்லையென்றால் முதலில் நமது உடலில் பாதிக்கப்படுவது எதிர்ப்பு சக்தி மண்டலம் தான்.

தூக்கம் இல்லாததால் எதிர்ப்பு சக்தி மண்டலம் வெளிப்படுத்த கூடிய cytokine என்கிற மூல பொருள் குறைந்து விடுகின்றது. இதனால் அடிக்கடி உடல்நல கோளாறுகளை தரும். மேலும் தொற்றுகளுக்கும் வழி வகுக்கும்.

இரவு அதிக நேரம் வரை விழித்திருக்கும் மூன்று வயது குழந்தைகள், பிற்காலத்தில் கணிதம், புத்தக வாசிப்பு போன்றவற்றில் ஈடுபட சிரமப்படுகிறார்கள் என லண்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

தூக்கத்தின் அளவு குறைந்துபோவதால் உடலின் இயற்கையான செயல்வேகம் பாதிக்கப்படுகிறது. இதனால் புதிய தகவல்களை எளிதாக கிரகித்துக்கொள்ளும் மூளையின் திறன் பாதிக்கப்படுகிறது என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

தூக்கம் இல்லாவிடில் உடல் நலக்குறைவு ஏற்படும். எனவே தூக்கத்திற்காக பலர் படாதபாடு படுகின்றனர். அதற்காக மருந்து மாத்திரை சாப்பிடுகின்றனர்.

7 மணி நேர தூக்கம் போதும் என தற்போது தெரியவந்துள்ளது. வயது ஏற ஏற தூக்கத்தின் அளவை இன்னும் குறைக்கலாம். 10 வயது குழந்தைகள் 9 மணி நேரமும், 12 வயதினர் 8 மணிநேரமும், டீன்ஏஜ் வயதினர் 7 மணி நேரமும் தூங்குவது சரியான அளவு.

சரியாக தூங்காவிடில் ஏற்படும் பிரச்சினைகள்

மந்தத் தன்மை

எல்லாருக்கும் தூக்கம் அவசியம். நீண்ட காலமாக 5 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்கினால், உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு குறையும். அவர்களின் அன்றாட செயல்பாடுகளில் சுணக்கம், மந்தத் தன்மை ஏற்படும்.

மார்பக புற்றுநோய்

சரியாக தூங்காத பெண்களுக்கு புற்றுநோய், குறிப்பாக மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம். அதிகளவு உடற்பயிற்சி செய்தாலும் சரியாக தூங்கினால் மட்டுமே அதன் முழு பலன் கிடைக்கும்.

இதய நோய்

சரியாக தூங்கவில்லையென்றால் இதய நோயுடன், இரத்த அழுத்தமும் ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது.

சரியாக தூங்கவில்லையென்றால் அவனுடைய இதயம் வெடிப்பதற்குண்டான வாய்ப்புக்கூட இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இல்லற வாழ்வு

யாரெல்லாம் 8 மணி நேரம் தூங்கும் பழக்கம் கொண்டுள்ளனரோ அவர்களின் இல்லற வாழ்வு மிக இனிமையாக இருக்குமாம். 8 மணி நேரம் துக்கம் இல்லையேன்றால் அது தடைபடுமாம்.

ரத்த ஓட்டம்

8 மணி நேரத்திற்கும் குறைவாக உறங்குகிறார்களோ அவர்களின் ஆயுள் குறையும் மற்றும் மிக இளம் வயதிலே இவர்களை மரணம் நெருங்க அதிக வாய்ப்புகள் உள்ளதாம். குறைவான நேரம் நாம் தூங்கினால் நமது தசை வளர்ச்சி குறைய கூடும். அத்துடன் ரத்த ஓட்டமும் பாதிக்கப்படுமாம்.

மன அழுத்தம்

தூக்கம் குறைந்தால் மன அழுத்தம் அதிகரிக்க கூடும். 8 மணி நேரம் தூக்கம் இல்லையென்றால் மன நல குறைபாடு ஏற்படும். 8 மணி நேரம் தூக்கம் குறைந்துவிட்டால் முக சுருக்கங்கள, சரும பிரச்சினைகளும் இளமையான தோற்றத்தையும் குறைத்து விடுமாம்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்