பாடாய்படுத்தும் மூக்கடைப்பிலிருந்து நிவாரணம் கிடைக்க இதை செஞ்சு பாருங்க!

Report Print Nalini in மருத்துவம்
719Shares

மூக்கடைப்பு ஏற்படுவதற்கு சளி, அலர்ஜி, சைனஸ் பிரச்சனைகள் போன்றவை முக்கிய காரணங்களாக இருக்கும். அதிலும் சளி அல்லது அலர்ஜியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மூக்கின் வழியாக தூசிகள் செல்வதால், எரிச்சலை ஏற்படுத்துவதுடன், மூக்கு துவாரங்களில் புண்களை ஏற்படுத்திவிடும்.

குளிர்காலம் வந்து விட்டால் ஒட்டிப் பிறந்ததுபோல கூடவே சில உடல் நல தொல்லைகளும் வந்து விடும். தொண்டை வலி, மூக்கடைப்பு, தலைவலி, காய்ச்சல், சளி ஒழுகுதல், வறட்டு இருமல் ஆகியவை வரக்கூடும்.

அடிக்கடி மூக்கடைப்பைச் சரிசெய்யும் சொட்டு மருந்தையோ, தெளிப்பான் வகை மருந்துகளையோ பயன்படுத்தினால் நீங்கள் தொடர்ந்து அதனைப் பயன்படுத்த வேண்டிய நிலைக்கு ஆளாக நேரிடலாம்.

நீண்ட நாட்கள் இவ்வகை மருத்துகளைப் பயன்படுத்துவதால் உங்கள் மூக்கினுள் உள்ள சளிச்சவ்வுப் படலம் பாதிக்கப்பட்டு நாற்றம் அல்லது எரிவது போன்ற உணர்வை ஏற்படுத்தலாம்.

ஒவ்வாமை காரணமாக மூக்கின் சளிச்சவ்வுப் படலத்தில் அழற்சி ஏற்படும். இதனை ஒவ்வாமை மூக்கழற்சி என்பர். இது ஹே காய்ச்சல், ரோஸ் காய்ச்சல், புல் காய்ச்சல் மற்றும் சூழல் மாறுபாடுகளால் ஏற்படும் ஒவ்வாமையால் உண்டாகிறது.

ஆவி பிடித்தல்

மூக்கடைப்பின் போது, ஆவிப் பிடித்தால் உடனே மூக்கடைப்பில் இருந்து விடுபட்டு விடலாம். சூடான நீரில் 3 டேபிள் ஸ்பூன் வினிகர் சேர்த்து கலந்து ஆவி பிடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

சூடு நீர் குளியல்

மூக்கில் அடைப்பு ஏற்பட்டிருக்கும் போது, சூடு நீரில் குளித்தால் உடனே மூக்கடைப்பு நீங்கும்.

தண்ணீர் மற்றும் உப்பு

இரண்டு கப் வெதுவெதுப்பான நீரில், 1 டேபிள் ஸ்பூன் உப்பு போட்டு கலந்து, அதில் ஒரு துளியை மூக்கில் விட்டால், மூக்கடைப்பு நொடியில் சரியாகிவிடும்.

வெங்காயம்

வெங்காயத்தை நறுக்கி, அதனை நுகர்ந்து பார்த்தால், மூக்கடைப்பு நீங்கும். இல்லையென்றால், வெங்காயத்தை அப்படியே சாப்பிட்டாலும் மூக்கடைப்பு சரியாகும்.

பூண்டு, மஞ்சள் தூள்

ஒரு கப் தண்ணீரில் 2-3 பூண்டு பற்களைப் போட்டு, அத்துடன் 1-1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைத்து தொடர்ந்து குடித்து வந்தால் மூக்கடைப்பு சரியாகும்.

யூகலிப்டஸ் ஆயில்

கைக்குட்டையில் 2-3 துணிகள் யூகலிப்டஸ் ஆயிலை ஊற்றி, அதனை சுவாசித்தால் நிவாரணம் கிடைக்கும்.

டீ

டீ செய்து குடிப்பதற்கு பதிலாக, தினமும் புதினா, இஞ்சி, ஏலக்காய், துளசி போன்றவற்றை சேர்த்து டீ தயாரித்து குடித்தால் மூக்கடைப்பு சரியாகும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்