கணுக்கால் வீக்கம் ஏன் ஏற்படுகிறது? வலி ஏற்படாமல் இருக்க இதை பாலோ பண்ணுங்க?

Report Print Nalini in மருத்துவம்
1831Shares

கணுக்காலிலும், காலிலும் வீக்கம் என்பது அசவுகர்யமாக இருக்கும். கவலை அளிக்கும். இதற்கு பல முக்கியக் காரணங்கள் உள்ளன.

ஆனால் சில சாதாரண காரணங்களும் இருக்கக் கூடும். வெகு நேரம் நிற்க நேர்ந்தால் கூட இந்த வீக்கம் ஏற்படும். பாதமும் கணுக்காலும் கீழ் கால்களில் அதிக நீர் தேக்கம் ஏற்படும் பொழுது ஏற்படுகின்றது.

அதே போன்று கால்களை வெகு நேரம் தொங்க போட்டவாறு உட்காருபவர்களுக்கும் இதே பாதிப்பு ஏற்படும். இதனை தவிர்க்க வேண்டியது அவரவர் கையில்தான் உள்ளது.

30 நிமிடங்களுக்கொருமுறை 5 நிமிடங்கள் நடக்க வேண்டும். அப்பொழுது தான் ரத்த ஓட்டம் சீராய் இருக்கும். இதனை முறையாக செய்யாவிட்டால் பல பாதிப்புகள் ஏற்படும்.

இந்த பாதம் மற்றும் கணுக்கால் வீக்கத்தால் பெரும்பாலும் கருவுற்ற பெண்கள் அவதியுறுகின்றனர். கருவுற்ற காலத்தில் ஏற்படும் அதிகப்படியான உடல் எடை, நீண்ட நேரம் நின்று கொண்டே இருத்தல், அதிக தூரம் பயணித்தல், மாதவிடாய், பொட்டாசியம் பற்றாக்குறை, நீர்த் தேக்கம் மற்றும் சிறிய காயங்கள் இவற்றால் இந்த பிரச்சினை ஏற்படுகிறது.

8 டம்ளர் தண்ணீர்:

திரவம் தேங்குவதால் வீக்கம் ஏற்படும். இதனால் நாளொன்றுக்கு 8-10 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் குடிக்காவிட்டால் உடம்பில் திரவம் தேங்கி வீக்கம் ஏற்படும்.

ஐஸ் பேக் -

கணுக்கால் மற்றும் பாதத்தில் ஏற்படும் வீக்கத்திற்கு ஐஸ் பேக் வைத்து உத்தடம் கொடுக்கலாம். அல்லது குளிர்ந்த நீரில் கால்களை ஊற வைக்கலாம். இப்படி செய்தால் வீக்கம் குறையும்.

கால்களை உயர்த்தி வைத்துக் கொள்ளுதல்:

உட்காரும் போது அல்லது படுக்கும் போது கால்களை உயர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும். இப்படி செய்யும் போது கால்களில் மீது எந்த சுமையும் வைக்கக் கூடாது. சுவற்றில் கால்களை வைத்து முதுகில் சாய்ந்துக்கொண்டும் உட்காரலாம்.

மது :

மதுவானது உடலில் நீர் வற்றச் செய்து வீக்கத்தை அதிகரித்து விடும். மது அருந்துவதை நிறுத்தி இரண்டு நாட்கள் கடந்தும் வீக்கம் நீடித்தால் மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

கல்லுப்பு:

வெதுவெதுப்பான நீரில் ஒரு சிட்டிகை கல்லுப்பு கலந்து காலை ஊறவைத்தால் வீக்கம் மற்றும் வலியை குறைத்து விடும்.

எலுமிச்சை ஜூஸ்:

உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் மற்றும் மிகுதியான திரவங்களை நீக்க எலுமிச்சை ஜூஸ் பருகலாம். எலுமிச்சை ஜூஸை தினமும் குடித்து வரலாம்.

மக்னீசியம்:

உடலில் நீர் தேங்க மக்னீசியம் குறைபாடு காரணமாக கூட இருக்கலாம். எனவே, மக்னீசியம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். டோஃபூ, கீரை, முந்திரி, பாதாம், டார்க் சாக்லேட், புரொக்கோலி மற்றும் அவகேடோ ஆகிய உணவுகளில் மக்னீசியம் அதிகம் தேவைப்படும்.

உப்பு:

உணவில் உப்பு குறைவாக எடுத்துக் கொண்டால் திரவம் தேங்குவதை குறைத்து, வீக்கத்தை குறைத்து விட முடியும்.

கால் மசாஜ்:

கால் வீக்கத்திற்கு நிவாரணம் தர மசாஜ் உதவி செய்யும். தேங்கிய திரவத்தை அகலச் செய்து வீக்கத்தை குறைத்து விடலாம்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்