SPB தொண்டையில் துளையிட்டு பொருத்தப்பட்ட கருவி! மருத்துவமனையில் அவருக்கு தரப்பட்ட சிகிச்சைகள் என்னென்ன?

Report Print Raju Raju in மருத்துவம்

பாடகர் எஸ்பிபி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதில் இருந்து மரணிக்கும் வகையில் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து தெரியவந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கடந்த ஆகஸ்ட் 5ஆம் திகதி சென்னையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட உடன் தனது உடல்நிலை குறித்து, அவரே வீடியோ ஒன்றை வெளியிட்டு, ரசிகர்களுக்கு நம்பிக்கை ஊட்டினார்.

அடுத்த ஒரு வார காலத்தில் அவரது உடல்நிலை மோசமடைந்து, நுரையீரல் செயலிழக்கும் நிலைக்கு சென்றதால், செயற்கை சுவாசமும், எக்மோ சிகிச்சையும் கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, சமூகவலைதளங்களில் வதந்திகள் பரவத் தொடங்கின.

இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்ட எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் சரண், தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார். இதுதொடர்பாக ஆகஸ்ட் 15ஆம் திகதி பேஸ்புக் பக்கத்தில் வீடியோ வெளிட்ட எஸ்.பி.பி.சரண், செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் எஸ்.பி.பி. உடல் நிலை சீராக இருப்பதாக தெரிவித்தார்.

இதனிடையே, செயற்கை சுவாசத்தில் இருந்த SPBக்கு அவர் பாடிய காதல் பாடல்கள், பக்தி பாடல்கள் மற்றும் மெல்லிசை பாடல்கள் என அவர் இருக்கும் அறையிலேயே ஒலிக்க வைக்கப்பட்டன.

இதனிடையே, கொரோனா தொற்றில் இருந்து எஸ்.பி.பி. மீண்டு விட்டதாக தெரியவந்தது.

இந்நிலையில், தொடர் சிகிச்சையில் இருந்த எஸ்.பி.பிக்கு நீண்ட நாள் சிகிச்சை தேவைப்பட்டதால், கடந்த செப்டம்பர் 10ஆம் திகதி தொண்டையில் துளையிட்டு செயற்கை சுவாசம் கொடுப்பதற்காக, டிரக்யாஸ்டமி கருவி பொருத்தப்பட்டது.

எக்மோ சிகிச்சை, செயற்கை சுவாச சிகிச்சைகள் கொடுக்கப்பட்டாலும், அதில் இருந்து எஸ்.பி.பி மீண்டு வருவதற்கான சிகிச்சைகளும் தொடர்ந்தன. பின்னர் அவரின் நுரையீரல் செயல்பாடு மேம்பட்டு இருப்பதாக சரண் தெரிவித்தார்.

எஸ்.பி.பி.யின் நினைவாற்றல் நல்ல முன்னேற்றம் அடைந்து வந்த நிலையில், கடந்த 24ஆம் திகதி பிற்பகலில் அவரது உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டது. மூளையில் ஏற்பட்ட திடீர் ரத்த கசிவால், அவர் சுய நினைவை இழந்ததாக தகவல் வெளியானது.

இதன்பின்னர் அவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் 25ஆம் திகதி பகல் 1.04 மணிக்கு அவர் உயிர் பிரிந்தது.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்