மூக்கில் ஏன் ரத்தம் வருகிறது என்று தெரியுமா? அப்படி வந்தால் முதலில் என்ன செய்யலாம்!

Report Print Nalini in மருத்துவம்
682Shares

முகத்தை அழகாக காட்டுவதில் மூக்குக்குத்தான் முதல் பங்கு. சுவாசிக்கும் காற்றை உடலின் தட்பவெப்பநிலைக்கு ஏற்ப மாற்றி, நுரையீரலுக்கு அனுப்பும் பணியைச் செய்வதுடன், மணத்தை நுகரும் உறுப்பாகவும் இருக்கிறது.

குளிர்காலத்தில் பெரும்பாலும் வைரஸ் கிருமிகளால் நோய்கள் உண்டாகின்றன. இவை முக்கியமாக சுவாச மண்டலத்தை தாக்குகின்றன. இதனால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோய்த் தொற்று ஏற்படுகிறது.

சுவாசத்துக்கும் வாசனைக்கும்தான் மூக்கு படைக்கப்பட்டுள்ளது என்று நினைக்காதீர்கள். மூக்கு ஒரு ஏர்கண்டிஷனர் மாதிரி.

வெளியிலிருந்து வருகிற குளிர்ந்த காற்றையோ, சூடான காற்றையோ நம் உடலுக்குத் தேவையான வெப்பநிலைக்கு மாற்றி அனுப்ப வேண்டியதும் மூக்கின் வேலைதான்.

தூசு நிறைந்த காற்று, டீசல் புகை போன்றவற்றால் அலர்ஜி ஏற்பட்டு மூக்கில் ‘பாலிப்ஸ்’ எனப்படும் சதை வளரும். இதனால், மூச்சுத் திணறல் வரலாம்.

நுகர்வுத் தன்மை பாதிக்கப்படும். அறுவை சிகிச்சை மூலம் ‘பாலிப்ஸ்’-ஐ அகற்றிவிடலாம். மாத்திரைகள் மூலமாக அலர்ஜியைக் கட்டுப்படுத்தலாம்.

மூக்கில் அடிபட்டால் ரத்தம் வருவது இயல்பு. அடிபடாமல், காயம் எதுவும் ஏற்படாமல், சிலருக்கு மூக்கிலிருந்து திடீரென்று ரத்தம் வடிவதுண்டு.

நடைமுறையில் வயதில் மூத்தவர்களைவிட குழந்தைகளுக்குத்தான் இந்தத் தொல்லை அதிகமாகக் காணப்படும். இதை ஆங்கிலத்தில் ‘எபிஸ்டேக்சிஸ்' (Epistaxis ) என்று அழைக்கிறார்கள்.

பித்த தோஷ சீர்கேட்டினால் மூக்கில் ரத்தம் வரும். இதை ஆயுர்வேதம் ரக்த பித்தா என்கிறது. காயமில்லாமல் சிலருக்கு மூக்கில் இருந்து தீடி ரென்று ரத்தம் கொட்டும். உண் மையில் மூக்கு ஒரு மென்மையான அவயம்.

மூக்கை இரு பாகமாக பிரிக்கும் சுவரின் கீழ் பகுதியில் நுண்ணிய இரத்தக் குழாய்கள் தந்துகிகள் சந்திக்கி ன்றன. இவைகள் சுலபமாக உ டையும் குழாய்கள். சிறு பாதிப்பு ஏற்பட்டாலும் மூக்கை நோ ண்டும்போது உடைந்து ரத்தம் வர ஆரம்பித்து விடும்.

மூக்கில் ரத்தம் வர காரணங்கள்

 • மூக்கை நோண்டுவது, விபத்து, மூக்கில் அடிபடுவது.
 • குளிர்காலத்தில் உலர்ந்த சூடா ன காற்றை அதிக நேரம் சுவாசி க்க நேர்ந்தால் இரத்தப்போக்கு ஏற்படலாம்.
 • ஆஸ்பிரின் போன்ற இரத்த மிளக்கிகள் காரணமாகலாம்.
 • பலமாக மூக்கை சிந்துவ து, மூக்கில்கட்டி, சைனஸ், ஷயரோகம், பால்வி னை நோய்கள், தொழு நோய் இவை காரணமாகவும் ரத்த ம் வரும்.
 • உலர்ந்த, சூடான மற்றும் குறைந்த ஈரப்பதமான சூழலில் வாழ்தல்
 • மேல் சுவாச தொற்றுகள்
 • மூக்கில் அல்லது முகத்தில் காயம்
 • ஒவ்வாமை

பரிசோதனை

வழக்கமான ரத்தப் பரிசோதனைகளுடன், மூக்குப் பகுதியை எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன், எண்டாஸ்கோப்பி எடுத்துப் பார்த்தால் மூக்கில் ரத்தம் வடிவதற்குக் காரணம் தெரிந்துவிடும். அதைத் தொடர்ந்து அதற்கான சிகிச்சையைப் பெற்றுக்கொண்டால், முழு நிவாரணம் கிடைக்கும்.

தடுக்கும் வழிகள்

 • மூக்கில் இரத்தம் வரும் போது, ஒரு துணியில் ஐஸ்கட்டிகளை வைத்து கட்டி மூக்கின் மேல் சில நிமிடங்கள் வைக்க வேண்டும். இதனால் மூக்கில் உள்ள இரத்த மென்மையான நாளங்கள் சுருங்கி இரத்தம் வடிவது நிற்கும்.
 • உடல் சூடுதான். எனவே, தேவையான அளவு தினமும் தண்ணீர் குடிக்க வேண்டும்.
 • அவசியம் இல்லாமல் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
 • போதுமான வைட்டமின் சி உணவுகளை உட்கொள்வது இரத்த நாளங்களை வலுவானதாக்க உதவுகிறது. அதனால் மூக்கில் இரத்தம் வடிவதை தடுக்க நிரந்தர தீர்வாகும்.
 • நெட்டில் இலையை தேயிலை போல் கொதிக்க வைத்து, அதை குளிர விட்டு, துணியை அதில் நனைத்து மூக்கில் வைக்க வேண்டும். அப்படி செய்தார் 10 நிமிடங்களில் ரத்தம் வருவது நின்று விடும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்