பைல்ஸ் வலி தாங்கமுடியலையா? இதனை போக்க இதோ சில கை வைத்தியங்கள்!

Report Print Kavitha in மருத்துவம்
0Shares

தற்போது சில இளம் வயதினர் கூட பைல்ஸ் பிரச்சினையால் அதிகம் அவஸ்தைப்பட்டு வருகின்றார்கள்.

மூலம் என்பது ஆசன வாயிலுள்ளும், வெளியிலும் தேவையற்ற சதைகள் வளர்ந்து குத வாயிலை அடைத்துத் துன்புறுத்துவக்கூடியது ஆகும்.

மூல நோய் இரண்டு வகைப்படும் அவை உள் மூலம், வெளி மூலம். அதில் உள் மூலம் என்பது மலக்குடலினுள் வளரும் மற்றும் வெளி மூலம் என்பது ஆசனவாய்க்கு கீழே வளரும். இது வேதனை தரக்கூடிய நோய்களில் ஒன்றாகும்.

இதனை போக்கும் ஒரு சில கைவைத்தியங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

 • மலச்சிக்கல் பிரச்சனையைத் தவிர்க்க 2-3 உலர்ந்த அத்திப்பழத்தை இரவு தூங்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இப்படி 2-3 வாரங்களுக்கு சாப்பிட்டால், மலச்சிக்கல் நீங்கி மூல நோயில் இருந்தும் விடுபடலாம்.

 • முள்ளங்கி ஜூஸ் பைல்ஸ் பிரச்சனைக்கு மிகவும் அற்புதமான பானம். தினமும் காலை மற்றும் மாலை அரை கப் முள்ளங்கி ஜூஸ் குடிக்க வேண்டும். இப்படி ஒரு மாதம் குடித்து வருவது மூல நோய்க்கு மிகச்சிறந்த வீட்டு வைத்தியமாகும்.

 • நோய் உள்ளவர்கள், ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி இலை சாற்றினை ஒரு டீஸ்பூன் சர்க்கரையுடன் சேர்த்து, தினமும் மூன்று வேளை சாப்பிட்டு வர மூல நோய் விரைவில் குணமாகும். மூல நோயால் மிகவும் அவதிப்படுபவர்கள் வேண்டுமானால் இதை முயற்சித்துப் பாருங்கள்.

 • புதினாவின் சாற்றினை ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொண்டு, அத்துடன் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, தினமும் 3 முறை சாப்பிட்டு வந்தால், பைல்ஸ் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

 • பைல்ஸ் பிரச்சனை இருப்பவர்கள் நிம்மதியாக உட்கார முடியாத அளவில் ஆசன வாய் பகுதியில் கடுமையான வலியை சந்திப்பார்கள். அப்படி வலி சந்திக்கும் போது சீரகத்தை நீர் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, ஆசன வாயில் பூசினால், வலி குறையும்.

 • ஒரு அகலமான வாளியில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, அதில் பதினைந்து நிமிடம் உட்கார வேண்டும். அதன் பின் ஆசன வாய் பகுதியை சுத்தமாக துடைத்துவிட வேண்டும். இப்படி தினமும் 3 முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

 • உங்களுக்கு பைல்ஸ் இருந்தால், 2-3 துளிகள் டீ-ட்ரீ ஆயிலுடன் ஒரு டீபூன் ஆலிவ் ஆயிலுடன் சேர்த்து கலந்து, பஞ்சுருண்டையில் நனைத்து ஆசன வாயில் தடவ வேண்டும். இப்படி தினமும் 3 முறை செய்ய நல்ல நிவாரணம் கிடைக்கும்.

 • வெளி மூலம் உள்ளவர்கள், கற்றாழையின் ஜெல்லை எடுத்து, அதை ஆசன வாயில் தடவி பதினைந்து நிமிடம் ஊற வைக்க வேண்டும். உள் மூலம் உள்ளவர்கள் கற்றாழை இலையின் தோல் மற்றும் முட்களை நீக்கிவிட்டு, ஜெல்லை ஃப்ரிட்ஜில் வைத்து, பின் அதை ஆசன வாயில் சொருக வேண்டும். இப்படி தினமும் 3 முறை செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

 • சுத்தமான தேங்காய் எண்ணெயை ஆசன வாயில் தடவ வேண்டும். இப்படி தினமும் 3 முறை செய்து வாருங்கள். இது ஆசன வாயில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடி விரைவில் குணமாக உதவும்.

 • பைல்ஸ் பிரச்சனை உள்ளவர்கள் நற்பதமான பூண்டு பற்களை ஒரு கப் நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி குளிர வைத்து, அதில் பஞ்சுருண்டைகளைப் போட்டு ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும்.

 • வெளிமூலம் உள்ளவர்கள் இதில் ஒரு பஞ்சுருண்டையை எடுத்து ஆசன வாயில் தடவ வேண்டும். உள்மூலம் உள்ளவர்கள் ஒரு பூண்டு பல்லின் தோலுரித்து, அதை லேசாக நசுக்கி அதை ஆசன வாயில் சொருகி இரவு முழுவதும் வைத்திருங்கள்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்