சாதனை விலைக்கு விற்கபட்ட வாகன நம்பர் பிளேட்!

Report Print Arbin Arbin in மத்திய கிழக்கு நாடுகள்
சாதனை விலைக்கு விற்கபட்ட வாகன நம்பர் பிளேட்!

ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்ற வாகன நம்பர் பிளேட்களுக்கான ஏலத்தில் 1 என மட்டும் பொறிக்கப்பட்ட நம்பர் பிளேட்டை தொழிலதிபர் ஒருவர் சாதனை விலை கொடுத்து வாங்கியுள்ளார்.

சிறப்பு வாகன நம்பர் பிளேட்டுகளுக்கான ஏலம் ஐக்கிய அமீரகத்தில் உள்ள ஷார்ஜாவில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தொழிலதிபர் அரிப் அகமது அல் ஸரோனி “1” என பொறிக்கப்பட்ட நம்பர் பிளேட்டை 32.9 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளார்.

தொழில் துறையிலாகட்டும் எப்போதும் முதலிடத்தில் இருக்கவே ஆசைப்படுவதாக கூறும் ஸரோனி, அதனாலேயே விலை குறித்து கவலைப்படாமல் இந்த நம்பர் பிளேட்டை ஏலத்தில் எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

இந்த ஏல நிகழ்ச்சியில் மேலும் பல சிறப்பு எண்கள் கொண்ட நம்பர் பிளேட்டுகளுக்கு கடுமையான போட்டி நிலவியது. குறிப்பாக 12, 22, 50, 100, 333, 777, 1000, 2016, 2020 மற்றும் 99999 ஆகிய எண்கள் அவை.

ஐக்கிய அமீரகத்தில் உள்ள ஏழு எமிரேட்ஸ்களிலும் வெவ்வேறு நம்பர் பிளேட் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதால், பொதுமக்களுக்கு இதுபோன்ற சிறப்பு எண்களை சொந்தமாக்க பொதுவாக 7 வாய்ப்புகள் உள்ளன.

மேலும், தற்போது நடைபெற்ற ஏலத்தில் ஸரோனி பெருமளவு தொகை செலுத்தி குறிப்பிட்ட எண் கொண்ட நம்பர் பிளேட்டை சொந்தமாக்கி இருக்கலாம், ஆனால் இது சாதனை விலை அல்ல என கூறுகின்றனர்.

கடந்த 2008 ஆம் ஆண்டு அபுதாபியில் வைத்து நடைபெற்ற ஏலத்தில் அங்குள்ள ஒரு தொழிலதிபர் நம்பர் 1 என குறிப்பிடப்பட்ட நம்பர் பிளேட்டுக்காக 9.8 மில்லியன் பவுண்டுகள் செலவிட்டுள்ளார்.

அந்த தொகையை சாலை விபத்துகளுக்கான பிரத்தியேக மருத்துவமனைக்கு செலவிட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments