பாக்தாத் குண்டு வெடிப்பில் 12 பேர் பலி!

Report Print Deepthi Deepthi in மத்திய கிழக்கு நாடுகள்
பாக்தாத் குண்டு வெடிப்பில் 12 பேர் பலி!

ஈராக்கின் தலைநகரான பாக்தாத் நகரில் இரண்டு குண்டு வெடிப்பு தாக்குதல் நேற்றிரவு இடம் பெற்றுள்ளது.

இந்த தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டதுடன், 38 பேர் படுகாயமடைந்திருப்பதாக பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

முதல் வெடிப்பானது காரடா மத்திய பகுதியில் மக்கள் நெருக்கடி அதிகமாக காணப்பட்ட இடத்தில் ஏற்பட்டதாகவும் இதன் போது 11 பேர் கொல்லப்பட்டதுடன்,33 பேர் படுகாயமடைந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தீயணைப்பு படையினர் வெடிப்பு ஏற்பட்ட இடத்தில் உள்ள மக்களை காப்பாற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது வெடிப்பு தென் கிழக்கு பாக்தாத் நகரில் உள்ள ஷாப் என்ற இடத்தில் வெடித்த தாகவும் இதில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் 5 பேர் டுகாயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீவிரவாதிகளால் பல குண்டு வெடிப்பு தாக்குதல் பாக்தாத்தில் இடம் பெற்றுள்ளதாகவும்,கடந்த மே மாதம் ஏற்பட்ட வெடிப்பில் 90 பேர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பாக்தாத் பொலிஸ் நிலையத்தில் ஏற்பட்ட குண்ட வெடிப்பில் 3 பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments