ஷியா பிரிவு முஸ்லிம்களை குறிவைத்து தாக்குதல்: ரமழான் நேரத்தில் நேர்ந்த விபரீதம்

Report Print Fathima Fathima in மத்திய கிழக்கு நாடுகள்
ஷியா பிரிவு முஸ்லிம்களை குறிவைத்து தாக்குதல்: ரமழான் நேரத்தில் நேர்ந்த விபரீதம்

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஐஎஸ் தற்கொலைபடை தாக்குதல் நடத்தியதில் 125 பேர் உயிரிழந்தனர்,150க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

பாக்தாத்தில் உள்ள காராடா என்ற சந்தை பகுதியில், ரமழான் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் அனைவரும் புத்தாடை மற்றும் இதற பொருட்கள் வாங்க மகிழ்ச்சியுடன் குவிந்தனர்.

அப்போது ஐஎஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்த ஒருவன் கார் நிறைய வெடிபொருட்களை கொண்டுவந்து சந்தையின் மத்திய பகுதியில் வெடிக்கச் செய்தான்.

இந்த விபத்தில் 125 பேர் உயிரிழந்ததாகவும், 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சில பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகின்றன.

இதற்கிடையே தங்கள் வசமிருந்த பாலுஜா நகரத்தை கடந்த வாரம் ஈராக் அரசு படைகள் கைப்பற்றியதன் விளைவாகவும் மற்றும் ஷியா பிரிவை சேர்ந்த முஸ்லிம்களே குறிவைத்தே தாக்குதலை நடத்தியதாகவும் ஐஎஸ் அமைப்பினர் கூறியுள்ளனர்.

பிரதமரை திருடன் என்று கூறிய மக்கள்

தாக்குதல் நடந்த இடத்தை பார்வையிட வந்த பிரதமர் ஹைதர் அபால்டியை பார்த்து பொதுமக்கள் அனைவரும் திருடன் திருடன் என்று சத்தம் எழுப்பினர்.

இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது, இதனை அறிந்த பிரதமர் உடனே அப்பகுதியை விட்டு வெளியேறினார்

கிழக்கு பாக்தாத்தில் குண்டுவெடிப்பு

சம்பவம் நடந்த ஒரு சில மணி நேரங்களில் கிழக்கு பாக்தாத்திலும் குண்டு வெடித்தது, இதில் 5 பேர் உயிரிழந்தனர், 16 பேர் காயமடைந்துள்ளனர்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments