உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தும் ஐ.எஸ் அமைப்பின் புதிய மரண தண்டனை

Report Print Basu in மத்திய கிழக்கு நாடுகள்

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர், தற்போது தங்களிடம் பிடிபடும் கைதிகளை கொதிக்கும் தாரில் தூக்கிப் போட்டுக் கொல்லுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

கைதிகளை பாராங்கற்களை வைத்து நசுக்கிக் கொன்று வந்த ஐ.எஸ், தற்போது ஈராக் அரசுக்கு உளவு பார்ப்பதாக சந்தேகிக்கும் நபர்களை மனிதாபிமானமின்றி கொதித்துக் கொண்டிருக்கும் மிகப்பெரிய தார் டேங்கில் தூக்கிப் போட்டு கொல்லும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சமீபத்தில் ஷரியா நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பின்னர், ஈராக்கின், மொசூல் நகரில் 6 கைதிகளை தார் டேங்கில் தூக்கிப் போட்டு கொன்றுள்ளனர்.

இதுமட்டுமல்ல, கடந்த சில வாரங்களுக்கு முன்பு 25 கைதிகளை ஆசிட்டில் தூக்கிப் போட்டு கொன்ற மனிதாபிமானமற்ற செயலும் நடந்துள்ளது.

மக்களின் மனதில் பயத்தை ஏற்படுத்த அவர்கள் கண் முன் இந்தக் கொடுமையை ஐஎஸ் தீவிரவாதிகள் அரங்கேற்றி வருவதாக கூறப்படுகிறது.

ஐ.எஸ் அமைப்பின் இச்செயல்கள் தற்போது மத்திய கிழக்கு நாடுகளை மட்டுமின்றி உலகையே அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments