ராணுவத்தில் சேர இளம்பெண் மறுப்பு: சிறையில் தள்ளிய அரசு

Report Print Arbin Arbin in மத்திய கிழக்கு நாடுகள்
201Shares
201Shares
lankasrimarket.com

இஸ்ரேல் நாட்டில் ராணுவத்தில் சேர மறுப்பு தெரிவித்த இளம்பெண்ணை அந்த நாட்டு அரசாங்கம் சிறையில் அடைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் ராணுவத்தில் சேர மறுப்பு தெரிவித்த காரணத்திற்காக 19 வயதேயான Noa Gur Golan என்ற இளம்பெண் தற்போது ராணுவ சிறையில் தண்டனைபெற்று வருகிறார்.

மட்டுமின்றி அவரை தேசதுரோகி எனவும் கோழை எனவும் அங்குள்ள மக்களால் முத்திரை குத்தப்பட்டுள்ளார்.

இஸ்ரேலில் ராணுவத்தில் சேர்ந்து சேவை புரிவது என்பது சட்டமாகவே இருந்துவரும் நிலையில், இஸ்ரேலின் கொள்கைகளுக்கு தற்போதைய இளைய தலைமுறை கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.

நோவா மிகுந்த தேசப்பற்று கொண்டவர் எனவும் அவர் யுத்த விமானங்களை இயக்கும் விமானியாக வேண்டும் எனவும் கனவுடன் வாழ்ந்து வந்ததாகவும், ஆனால் 2 ஆண்டுகளுக்கு முன்னர் ராணுவ சேவை என்பது இளைஞர்களுக்கு கட்டாயம் என இஸ்ரேல் நாடு கொள்கை வகுத்த பின்னர் நோவா எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகவும் அவரது தாயார் மற்றும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

யுத்தந்தான் பதில் எனில், நாங்கள் தவறான கேள்விகளை வினவுகிறோம் என்ற வாசகங்களை நோவா அவரது படுக்கை அறையில் வாழ்த்து அட்டையாக வைத்திருந்துள்ளார்.

நோவாவின் இந்த முடிவு அவரது குடும்பத்தினருக்கு கடும் அதிர்ச்சியை அளித்தது.

எனவும், அவர்களது குடும்பத்தில் இதுவரை எவரும் ராணுவ சேவையில் கலந்துகொள்ள மறுப்பு தெரிவித்ததில்லை எனவும் நோவாவின் தாயார் ஐரிஸ் தெரிவித்துள்ளார்.

நோவாவின் இந்த முடிவை அடுத்து கைது செய்யப்பட்டுள்ள அவர், ராணுவத்தின் கீழுல்ல சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவர் தொடர்பான விசாரணை எப்போது துவங்கும், தண்டனை காலம் எத்தனை ஆண்டுகள் என எதுவும் தெரியாத நிலையில் நோவாவின் குடும்பம் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர்.

நோவா மட்டுமல்ல, கடந்த 2 ஆண்டுகளில் 10க்கும் மேற்பட்டோர் இதே குற்றத்திற்காக ராணுவ சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்