ஏமன் தலைநகர் அருகே விமானத் தாக்குதல்: 41 பேர் பலி

Report Print Arbin Arbin in மத்திய கிழக்கு நாடுகள்
95Shares
95Shares
lankasrimarket.com

ஏமன் நாட்டின் தலைநகர் சனா அருகே உணவு விடுதி ஒன்றின் மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் 41 பேர் கொல்லப்பட்டுள்ள சம்பவத்தில் ஐக்கிய நாடுகள் மன்றம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகளே இந்தத் தாக்குதலை நடத்தியதாக சனா பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். ஏராளமானோர் காயமடைந்திருப்பதால், உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனக் கருதப்படுகிறது.

மட்டுமின்றி இந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து 13 பேர் மாயமானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக சவுதி அரேபியக் கூட்டுப் படைகள் நடத்தி வரும் தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இப்போது நடந்திருக்கும் தாக்குதல் அவற்றில் மிகவும் கொடூரமானது என ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

மேலும் கடந்த ஆண்டைவிட 3 மடங்கு அதிகமாக வான் தாக்குதல் நடத்தப்படுவதாகவும், போராளிக்குழுவினருடனான சண்டையும் பெருமளவு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

கிளர்ச்சியாளர்களை குறிவைத்து சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் தாக்குதலை துவங்கியதன் பின்னரே ஏமன் பிரச்னை இந்த அளவில் பூதாகரமாக வெடித்துள்ளது என அங்குள்ள மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கடந்த 2015 மார்ச் மாதம் முதல் இதுவரை 10,000 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் மில்லியன் கணக்கிலான மக்கள் தங்கள் குடியிருப்புகளை இழந்து ஆதரவின்றி வெளியேறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மட்டுமின்றி சுகாதார சீர்க்கேட்டினால் 2,000 பேர் இதுவரை இறந்துள்ளனர். 5 லட்சம் பேர் வரை cholera பாதிப்பினால் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் 6 லட்சம் பேர் நோய் தொற்றினால் பாதிப்படைய கூடும் எனவும் அங்குள்ள சுகாதார அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்