பெண் போராளியிடம் பணிந்த சவுதி அரேபிய அரசு

Report Print Arbin Arbin in மத்திய கிழக்கு நாடுகள்
518Shares
518Shares
lankasrimarket.com

பழமைவாத நடைமுறைகளை கொண்டுள்ள சவுதி அரேபியாவில் பெண் போராளி ஒருவரின் கடும் போராட்டத்திற்கு அந்த நாட்டு அரசு பணிந்துள்ளது.

சவுதி அரேபியாவில் தந்தை, சகோதரர், கணவர், மகன் துணையுடன்தான் பெண்கள் வெளியிடங்களுக்குச் செல்ல முடியும்.

இந்த நிலையில் முற்போக்கு சிந்தனை கொண்ட பெண்கள் அமைப்பினர் கடந்த 1990-ம் ஆண்டு முதல், பல்வேறு உரிமைகளுக்காக அந்த நாட்டில் போராடிவருகின்றனர்.

குறிப்பாக பெண்களை கார் ஓட்ட அனுமதிக்கவேண்டி, லாஜென் அல் ஹாத்லுல்(28) என்பவர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவந்தார்.

2014-ம் ஆண்டு, சவுதியிலிருந்து பக்கத்து நாடான ஐக்கிய அமீரகத்துக்கு இவர் கார் ஓட்டிச் செல்ல முயன்றார். அவரைக் கைது செய்த சவுதி பொலிசார் 73 நாட்கள் சிறை தண்டனை விதித்தது.

இவரின் வழக்கறிஞரைக்கூட சந்திக்க அனுமதிக்கவில்லை என Amnesty International அமைப்பு சவுதி அரசுமீது குற்றம் சாட்டியது.

இந்நிலையில் ஹாத்லுல் போராட்டத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது. சவுதி அரேபிய அரசு, பெண்கள் கார் ஓட்ட விதிக்கப்பட்டிருந்த தடையை விலக்கியுள்ளது. 2018-ம் ஆண்டு யூன் மாதம் முதல் பெண்கள் கார் ஓட்ட அனுமதிக்கப்படுவார்கள். எனினும், லைசென்ஸ் வழங்குவது குறித்து தனியாக கமிட்டி அமைத்து முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னரின் இந்த முடிவுக்கு பெண்கள் நல ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

சவுதி மக்கள் தொகையில் ஆண்களுக்கு, நிகராக பெண்களும் சரிபாதி இடம்பிடித்து விட்ட இந்த நேரத்தில் இது போன்ற முக்கிய முடிவுகள் அவசியம் என மன்னர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்