சவுதி பள்ளி மாணவியிடம் பேசிய ஆண்: கொடுக்கப்பட்ட தண்டனை என்ன தெரியுமா?

Report Print Raju Raju in மத்திய கிழக்கு நாடுகள்

சவுதி அரேபியாவில் பள்ளி மாணவியிடம் பேசிய நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சவுதியின் மெக்கா நகரில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. நகரில் உள்ள பிரபல உணவக கட்டிடத்தின் பின்புறம் உணவக ஊழியர் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு பர்தா அணிந்து முகத்தை மூடியபடி வந்த பெண் ஒருவர் அந்த நபரிடம் அரை நிமிடம் பேசிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

இதை பக்கத்து கட்டிடத்தில் இருந்த யாரோ வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவேற்றியுள்ளனர்.

குறித்த வீடியோ இதுவரை 200,000-க்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டு வைரலாகியுள்ளது.

நபரிடம் பேசிய பெண் பள்ளி மாணவி என தெரியவந்துள்ள நிலையில் அவர் செய்தது சவுதியின் ஒழுக்க நெறிகளை மீறிய செயல் என பொலிசார் கூறியுள்ளார்.

மாணவியிடம் பேசிய உணவக ஊழியரை கைது செய்த பொலிசார் சவுதி விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் படி கேள்வி கேட்டு அதற்கான தண்டனையை அவருக்கு கொடுத்துள்ளனர்.

பொலிசாரின் செயலுக்கு பலர் ஆதரவும், பலர் எதிர்ப்பும் இணையம் மூலம் தெரிவித்துள்ளனர்.

சவுதியில் ஆண்கள் மற்றும் பெண்கள் விடயத்தில் கடுமையான நடைமுறைகள் பின்பற்றபடுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்