சவுதியில் மழை வெள்ளம்: தண்ணீரில் பெண் இழுத்து செல்லப்பட்ட காட்சி

Report Print Raju Raju in மத்திய கிழக்கு நாடுகள்

சவுதியின் ஜித்தா நகரில் பெய்து வரும் கடும் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவின் மிகப்பெரிய இரண்டாவது நகரமாக ஜித்தா திகழ்கிறது, நகரில் சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் ஆங்காங்கே வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக நகரை சுற்றியுள்ள பள்ளிகள் மற்றும் பல்கலைகழகங்கள் மூடப்பட்டுள்ளன, மழை வெள்ளத்தில் கார்கள், பைக்குகள் ஆங்காங்கே அடித்து செல்லப்படுகிறது,

பெண் ஒருவர் சாலை மழை வெள்ளத்தில் செய்வதறியாது நின்று கொண்டிருந்த நிலையில் காரில் கயிறு கட்டப்பட்டு அதன் மூலம் இழுத்து செல்லப்பட்டார்.

இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

சவுதி அரேபியாவின் ஜிட்டா மற்றும் மற்ற மேற்கு நகரங்களில் ஒவ்வொரு வருடமும் வெள்ளம் ஏற்படுகிறது, இதில் கடந்த 2009-ல் ஏற்பட்ட வெள்ளத்தில் நூறு பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்