சவுதியில் கைதான இளவரசர்கள் அமெரிக்க கூலிப்படையினரால் சித்திரவதை: வெளியான தகவல்

Report Print Arbin Arbin in மத்திய கிழக்கு நாடுகள்

முறைகேடு மற்றும் ஊழல் தொடர்பில் கைதான சவுதி இளவரசர்களை அமெரிக்க கூலிப்படைகளால் சித்திரவதைக்கு உள்ளாக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சவுதி அரேபியாவில் ஊழல் மற்றும் முறைகேடு தொடர்பில் இளவரசர்கள் மற்றும் அமைச்சர்கள் பலர் கைதாகினர்.

இது தற்போதைய பட்டத்து இளவரசரின் அதிகார குவிப்புக்கு எதிராக குரல் எழுப்பியதால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை எனவும் பரவலாக பேசப்பட்டது.

இந்த நிலையில், ஊழலில் குவித்த சொத்துக்களை அரசிடம் ஒப்படைத்தால் விடுதலை என்ற புதிய திட்டத்தை பட்டத்து இளவரசர் சார்பில் வெளியிட்டனர்.

ஆனால் எவரும் அதற்கு முன்வரவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் கைதான இளவரசர்களை அமெரிக்க கூலிப்படைகளை விட்டு கடுமையாக சித்திரவதைக்கு உள்ளாக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

விசாரணை என்ற பெயரில் இளவரசர்களை ரகசிய அறைகளில் பூட்டி வைத்து அமெரிக்க கூளிப்படைகள் சித்திரவதை செய்து வருவதாகவும்,

கைதான இளவசர்களின் செல்வாக்கை முற்றாக அழிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நடவடிக்கைகளை அமெரிக்காவின் 'Blackwater' என்ற அமைப்பு மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

சவுதியில் 'Blackwater' அமைப்பின் நடவடிக்கைகள் பெருகி வருவதாக லெபனான் ஜனாதிபதியும் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தது, இந்த விவகாரத்தில் உறுதியாகியுள்ளது.

ஆனால் குறித்த அமைப்பின் தலைவர் Academi இதை முற்றாக மறுத்துள்ளதுடன், அமெரிக்க குடிமகன் ஒருபோதும் அப்பேற்பட்ட நடவடிக்கையில் ஈடுபடமாட்டான் எனவும் தெரிவித்துள்ளார்.

முறைகேடு தொடர்பான விசாரணையை அமெரிக்க கூலிப்படைகளே விசாரித்து வருவதாகவும், சவுதி அதிகாரிகள் மீது பட்டத்து இளவரசருக்கு நம்பிக்கை இல்லை எனவும் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்தே அமெரிக்காவில் இருந்து மிகவும் கொடூரமான 'Blackwater' அமைப்பின் 150 கூலிப்படை வீரர்களை சவுதிக்கு வரவழைத்ததாக கூறப்படுகிறது.

மட்டுமின்றி உலகில் பல்வேறு நாடுகளில் செல்வாக்கு மிகுந்த பில்லியனர்களில் ஒருவரான இளவரசர் பின் தலாலை தலைகீழாக கட்டி வைத்து சித்திரவதை செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இவரது சொத்துமதிப்பு 17 பில்லியன் டொலர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்