ஜெருசலேம் விவகாரம்: டிரம்பின் அறிவிப்பால் பற்றி எரியும் மத்திய கிழக்கு நாடுகள்

Report Print Arbin Arbin in மத்திய கிழக்கு நாடுகள்

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்ட கருத்துக்கு மத்திய கிழக்கு நாடுகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.

இஸ்ரேல் விவகாரத்தில் டிரம்பின் இந்த அதிரடி அறிவிப்பை கண்டித்து துருக்கி, காஸா, ஜோர்டான், ஈரான் என மத்திய கிழக்கு நாடுகள் மொத்தமும் கொந்தளிப்பை பதிவு செய்துள்ளது.

பாலஸ்தீன ஜனாதிபதி அப்பாஸ் குறித்த அறிவிப்புக்கு கடும் கண்டனத்தை உடனடியாக பதிவு செய்துள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரன் அமெரிக்காவின் இந்த முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.

ஜேர்மனி ஒருக்காலும் டிரம்பின் முடிவை ஏற்றுக் கொள்ளாது என தெரிவித்துள்ளது. இதனிடையே பல்வெறு நாடுகளில் அமெரிக்க ஜனாதிபதியின் உருவபொம்மையை கொளுத்தி எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஜனாதிபதி டிரம்ப் உலகின் 1.5பில்லியன் இஸ்லாமியர்களுக்கு எதிராக போரை பிரகடனம் செய்திருக்கிறார் என ஈரான் தெரிவித்துள்ளது.

கத்தோலிக்க மத தலைவரான போப் பிரான்சிஸ், டிரம்பின் முடிவு வருத்தமளிக்கிறது எனவும், தம்மால் இந்த துயரத்தை அமைதியாக கடந்து செல்ல முடியவில்லை எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இதனிடையே டிரம்பின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பெத்லஹேம் நகரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட அலங்கார விளக்குகள் அனைத்தையும் அணைத்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஜோர்டானில் போராட்டக்காரர்கள் அமெரிக்க தூதரகம் அருகாமையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து தூதரக அதிகாரிகள் எவரும் தங்கள் குழந்தைகளை வெளியே அனுப்ப வேண்டாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்