சவுதி குடிமகனுக்கு வழங்கப்பட்ட சிறைத்தண்டனை: எதற்காக?

Report Print Raju Raju in மத்திய கிழக்கு நாடுகள்

தீவிரவாத இயக்கத்துக்கு ஆதரவளித்ததோடு, நிதியுதவியும் செய்த சவுதி குடிமகனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Daesh என்ற தீவிரவாத இயக்கத்துக்கு நபர் ஒருவர் SR5,000 பணத்தை நிதியுதவியாக அளித்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதோடு பல்வேறு விதமாக தீவிரவாத இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் புகார் கூறப்பட்டது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட அந்த நபர் மீது ரியாத் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் குற்றவாளியின் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டதால் 20 ஆண்டுகள் சிறை தண்டனையை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதோடு இணையத்தில் பதிவிட தடை செய்யப்பட்டுள்ளதோடு, குற்றவாளியின் செல்போன் சிம் கார்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சிறை தண்டனை முடிந்து வெளியில் வந்த பின்னர் அடுத்த 20 ஆண்டுகள் பயணத் தடையும் குற்றவாளிக்கு விதிக்கப்பட்டுள்ளது

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்