ஐக்கிய அரபு நாட்டில் வசிப்பவரா நீங்கள்? இந்த எச்சரிக்கை செய்தி உங்களுக்கே

Report Print Kabilan in மத்திய கிழக்கு நாடுகள்
226Shares

சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் வரியில்லா வாழ்க்கை முறை இந்த ஆண்டுடன் முடியப் போகிறது.

வெளிநாட்டினரை அதிக அளவில் ஈர்ப்பதற்காக, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் வரியில்லா வாழ்க்கை முறையை இதுவரை அமல்படுத்தியிருந்தன.

இந்நிலையில் இந்த ஆண்டுடன் அந்த முறை முடிவடைகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெயை மட்டுமே நம்பி வர்த்தகம் செய்யும் வளைகுடா நாடுகளில், இதன் விலை சரியத் தொடங்கியதால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியை சரி செய்யவே வரி முறையை கொண்டுவந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து 2018ஆம் ஆண்டு முதல் அனைத்துச் சரக்கு மற்றும் சேவையின் மீதும், 5 சதவீத வாட் வரி விதிப்பு முறை அமலுக்கு வர உள்ளது.

இந்த வரி விதிப்பு முறை சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் மக்கள் வாங்கும் உணவு, ஆடைகள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், எரிபொருள், மின்சாரக் கட்டணம் என அனைத்திற்கும் பொருந்தும்.

எனினும் இந்த வரி விதிப்பு முறையில் வீட்டு வாடகை, ரியல் எஸ்டேட் விற்பனை, சில மருந்து சிகிச்சை, விமான கட்டணம், பள்ளி கட்டணங்களுக்கு வரி விலக்கு உண்டு.

பள்ளிக் கல்வி கட்டணத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டாலும், குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சீருடை, புத்தகம், பள்ளி வாகன கட்டணம், உணவு ஆகியவற்றுக்கும், உயர் கல்விக்கும் வரி உள்ளது.

இதேபோல், பிற வளைகுடா நாடுகளும் தங்களுக்கான பிரத்தியேக வாட் வரியை நிர்ணயம் செய்ய உள்ளதாகவும், இது அடுத்தச் சில மாதங்களில் அமலுக்கு வரும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக சவுதி மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள அனைத்து வணிகர்களும், தங்களது விற்பனை பொருட்களின் இருப்பை அதிகரித்து வருகின்றனர்.

இந்த வரி விதிப்புகள் மூலமாக சுமார் 12 பில்லியன் திர்ஹாம் வரையில் வசூல் செய்ய ஐக்கிய அரபு நாடுகள் முடிவு செய்துள்ளன.

இருப்பினும் ஐரோப்பிய நாடுகளில் 20 சதவீதம் வரையில் வாட் வரியுடன் ஒப்பிடும் போது, 5 சதவீத வரி சற்றுக் குறைவே ஆகும்.

மேலும் நிதி நெருக்கடியான சூழ்நிலையிலும், சவுதியின் 2018ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் 261 பில்லியன் டொலர் அளவில் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்