சவுதி இளவரசர்கள் சிறை வைக்கப்பட்ட ஹோட்டல் திறப்பு

Report Print Fathima Fathima in மத்திய கிழக்கு நாடுகள்
103Shares
103Shares
ibctamil.com

சவுதி அரேபியாவில் ஊழல் தடுப்பு நடவடிக்கையின் போது இளவரசர்கள் மற்றும் உயரதிகாரிகளை கைது செய்து அடைத்து வைக்கப்பட்ட சொகுசு ஹோட்டல் மீண்டும் திறக்கப்படுகிறது.

ரியாத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலான ரிட்ஸ்- கார்ல்டன் பிப்ரவரி மாதத்திலிருந்து மீண்டும் முன்பதிவை துவக்கவுள்ளது.

இதுகுறித்து ஹோட்டலின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், ஹோட்டல் திறக்கப்படும் செய்தி உறுதியானதுடன் பிப்ரவரியிலிருந்து முன்பதிவுகள் ஏற்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் குறுகிய கால அவகாசத்தில் ரத்து செய்யப்படலாம் என்ற எச்சரிக்கை செய்தியுடன் முன்பதிவுகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு நவம்பர் மாதம் 200க்கும் மேற்பட்ட இளவரசர்கள், அமைச்சர்கள் மற்றும் தொழிலதிபர்கள் இந்த ஹோட்டலிலும் மற்ற ஹோட்டலிலும் தங்க வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்