சவுதியில் பெற்ற தாயை கொலை செய்த இரட்டை சகோதரர்கள்: என்ன தண்டனை?

Report Print Raju Raju in மத்திய கிழக்கு நாடுகள்
282Shares
282Shares
ibctamil.com

சவுதியில் பெற்ற தாயை கத்தியால் குத்தி கொலை செய்த இரட்டை சகோதரர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ரியாத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. காலித் மற்றும் ஷலி ஆகிய இருவரும் இரட்டை சகோதரர்கள் ஆவார்கள்.

இவர்கள் Daesh என்ற தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து செயல்பட முடிவெடுத்த நிலையில் அதை அவர்களின் தாய் கண்டுப்பிடித்துள்ளார்.

இது குறித்து கண்டித்த தாய், மகன்கள் குறித்து பாதுகாப்பு அதிகாரிகளிடம் தெரிவிப்பேன் என மிரட்டியுள்ளார்.

இந்நிலையில் Daesh இயக்கத்திலிருந்து வந்த உத்தரவுபடி தாயை காலித் மற்றும் ஷலி கத்தியால் குத்தி கடந்த 2016 யூன் கொலை செய்துள்ளனர்.

மேலும், தந்தை மற்றும் இன்னொரு சகோதரனையும் கொலை செய்யும் நோக்கில் தாக்கிய நிலையில் வீட்டில் இருந்த காரை திருடி கொண்டு இரட்டை சகோதரர்கள் தப்பி சென்றுள்ளனர்.

இதையடுத்து பொலிசார் காலித் மற்றும் ஷிலியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.

இருவர் மீதான வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில் இரட்டை சகோதர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என அரசு வழக்கறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்ந்து இருவர் மீதும் நீதிமன்ற விசாரணை நடக்கவுள்ளது.


மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்