சவுதி கோடீஸ்வரர்கள் விடுதலை செய்யப்பட்டதன் பின்னணி என்ன?

Report Print Deepthi Deepthi in மத்திய கிழக்கு நாடுகள்
170Shares
170Shares
ibctamil.com

சவுதியில் ஊழலில் ஈடுபட்டதாக கூறி கடந்த ஆண்டு நவம்பர் மாதம், 200க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் அதிரடி நடவடிக்கை எடுத்தார்.

இதில், பிரபல தொழில்அதிபர்கள், அரசியல்வாதிகளும் அடங்குவர்.

இவர்கள் அனைவரும், ரியாத்தின் சொகுசு விடுதி ஒன்றில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களில் உலக கோடீஸ்வரர் பட்டியலில் 45 வது இடத்தில் உள்ள அல்வலீத் பின் தலால் இரண்டு மாத சிறைதண்டனைக்கு பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார்.

இவர் தனது ஆதரவை பட்டத்து இளவரசருக்கு தெரிவித்துள்ளதாகவும், இளவரசர் முன்வைத்து நிதி தீர்வை (கைது செய்யப்பட்டவர்கள் தங்கள் சொத்துக்களில் ஒரு தொகையை திருப்பி கொடுக்க வேண்டும்) இவர் ஏற்றுக்கொண்டதால் இவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அல்வலீத் மட்டும் அல்லாமல், அவருடன் கைதான பல பெரும்புள்ளிகள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். எம்பிசி தொலைக்காட்சி குழுமத்தின் தலைவர் வலீத் அல் இப்ராஹிம், அரச நீதிமன்றத்தின் முன்னாள் தலைவர் கலீத் அல் ஆகியோரும் விடுதலை செய்யப்பட்டார்கள்.

அதே நேரம், இன்னும் ஓர் உடன்படிக்கை எட்டாததை அடுத்து பலர் அந்த சொகுசு விடுதியில் உள்ளனர்.

இதற்கிடையில், சவுதியில் ஊழலை ஒழிக்க இளவரசர் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை, எதிரிகளை பழிவாங்கும் ஒன்று எனவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்