சவுதி அரேபியாவில் நடுரோட்டில் குத்தாட்டம் போட்ட இளம்ஜோடி: அரசு செய்தது என்ன?

Report Print Arbin Arbin in மத்திய கிழக்கு நாடுகள்
364Shares
364Shares
ibctamil.com

சவுதி அரேபியாவில் இளம் ஜோடி ஒன்று தெருவில் நடனமாடும் வீடியோ வரலான நிலையில் இருவரையும் கைது செய்து விசாரிக்க மாகாண நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

சவுதி அரேபியாவின் ஆப நகரில் குறித்த சம்பவம் நடந்துள்ளது. இங்குள்ள ஜனநடமாட்டம் மிகுந்த தெருவில் ஒரு ஆணும் பெண்ணும் மகிழ்ச்சியாக நடனமாடியுள்ளனர்.

இச்சமபவத்தை கூடி நின்ற மக்கள் தங்கள் மொபைல் போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.

குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதும், இந்த விவகாரம் தொடர்பில் விசாரிக்கவும், அந்த வீடியோவில் தோன்றிய இருவரையும் கைது செய்யவும் ஆசிர் மாகாண ஆளுநரான இளவரசர் பைசல் பின் கலீத் உத்தரவிட்டுள்ளார்.

பழமைவாத சட்டங்களை கடைபித்துவரும் சவுதி அரேபியாவில் கேளிக்கைகளுக்கு அனுமதி இல்லை.

நீண்ட பல ஆண்டுகள் போராடிய பின்னர் கடந்த ஆண்டு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு பெண்களுக்கு தனியாக வாகனம் ஓட்ட அனுமதி வழங்கியுள்ளனர்.

குறித்த வீடியோ வைரலானதும் சமூக வலைதளத்தில் பலரும் தங்கள் கருத்தை பதிவு செய்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் ஆதரித்தும் சிலர் எதிர்ப்பு தெரிவித்தும் கருத்து பதிந்துள்ளனர்.

சவுதியில் இதுபோன்ற கைது நடவடிக்கையானது முதன் முறை அல்ல, கடந்த ஆண்டு சிறுவன் ஒருவன் தெருவின் நடுவே நின்று நடனமாடியதற்கு பொதுவெளியில் ஒழுக்கத்தை கடைபிடிக்காத குற்றத்திற்காக கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்