ஜாக்பாட் பரிசுக் குலுக்கலில் கோடிகளை அள்ளிய நபர்

Report Print Arbin Arbin in மத்திய கிழக்கு நாடுகள்
237Shares
237Shares
ibctamil.com

அபுதாபி நாட்டில் வாழும் கேரள மாநிலத்தவருக்கு சமீபத்தில் நடைபெற்ற லொட்டரி குலுக்கலில் 10 மில்லியன் திர்ஹம் ஜாக்பாட் பரிசு கிடைத்துள்ளது.

கேரள மாநிலத்தை சேர்ந்த சுனில் மப்பட்டா கிருஷ்ணன் குட்டி நாயர் சில ஆண்டுகளாக அபுதாபி நாட்டில் பணியாற்றியபடி அங்கேயே வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில், அங்குள்ள தனது நண்பர்கள் 4 பேருடன் கூட்டாக சேர்ந்து 500 திர்ஹம் கொடுத்து அதிர்ஷ்ட பரிசுச் சீட்டு ஒன்றை சுனில் வாங்கியிருந்தார்.

சமீபத்தில் நடந்த குலுக்கலில் சுனில் வாங்கிய பரிசுச் சீட்டுக்கு 10 மில்லியன் திர்ஹம் ஜாக்பாட் பரிசாக கிடைத்துள்ளது.

இந்த தொகையை தன்னுடன் சேர்ந்து பரிசுச் சீட்டு வாங்கிய நண்பர்கள் 4 பேருடனும் பகிர்ந்துகொள்ளப் போவதாக சுனில் மப்பட்டா தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ‘பிக் டிக்கெட் குலுக்கல்’ லொட்டரியில் அஜ்மன் பகுதியில் வசிக்கும் கேரள மாநிலத்தை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் நாயர் என்பவர் 1 கோடியே 20 லட்சம் திர்ஹம் பரிசு தொகையாக வென்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்