மனைவியை வேவு பார்க்கும் கணவன்கள் அதிகரிப்பு: வெளியான ஆய்வறிக்கை

Report Print Arbin Arbin in மத்திய கிழக்கு நாடுகள்
96Shares
96Shares
ibctamil.com

ஐக்கிய அமீரகத்தில் கணவனால் வேவு பார்க்கப்படும் மனைவிகளின் எண்ணிக்கை 36 விழுக்காடாக அதிகரித்துள்ளது என புதிய ஆய்வறிக்கை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

ஆரோக்கியமானதும் அன்புக்குரியதுமான உறவுக்கு கணவன் மனைவிக்கு இடையே எந்த ரகசியங்களும் இல்லாமல் இருப்பதே முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

பிரச்னைகள் இல்லாத குடும்ப உறவுகளும் இல்லை என்றபோது, அதுவே தமது மனைவியை வேவு பார்க்கும் மன நிலைக்கு இட்டுச் செல்கிறது.

சமீபத்தில் பிரபல தனியார் நிறுவனம் ஒன்று மேற்கொண்ட ஆய்வில், 79 விழுக்காடு தம்பதிகள் தங்களுக்கான தனிப்பட்ட இடைவெளி வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் 10-ல் 8 பேர் தங்களது உறவுக்கு முன்னிரிமை அளிப்பதால் ரகசியங்களுக்கு அதில் இடம் இல்லை என தெரிவித்துள்ளனர்.

62 விழுக்காட்டு தம்பதிகள் தங்களது கடவுச்சொல் மற்றும் வங்கி பின் எண்களையும் பொதுவாக வைத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் 36 விழுக்காடு ஐக்கிய அமீரக ஆண்கள் தங்கள் மனைவி அல்லது காதலியை வேவு பார்ப்பதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்