தலைமுடி தெரியும்படி உடற்பயிற்சி செய்யும் பெண்கள்: சவுதி அரசு எடுத்த அதிரடி முடிவு

Report Print Kabilan in மத்திய கிழக்கு நாடுகள்

சவுதி அரேபியாவில் தலைமுடியை மறைக்காமல் பெண்கள் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகளை வெளியிட்ட உடற்பயிற்சி நிலையத்தை மூட, அந்நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் பெண்களுக்கு வாகனம் ஓட்டுதல், பள்ளிகளில் விளையாட்டு பயிற்சி என சில விடயங்களில் விதிகள் தளர்த்தப்பட்டு, சுதந்திரம் அளிக்கப்பட்டு வருகிறது.

எனினும், பொது இடங்களில் தலையை துணியால் மறைக்காமல் வெளியே வரக்கூடாது என்ற உத்தரவு கண்டிப்பாகப் பின்பற்றப்படுகிறது.

இந்நிலையில், உடற்பயிற்சி நிலையம் ஒன்று சவுதி பெண்கள் ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு பயிற்சி செய்வது, தலைமுடியை மறைக்காமல் பயிற்சியில் ஈடுபடுவது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளது.

இது சவுதி அரசின் சட்டத்திற்கு எதிராக இருப்பதால், அந்நாட்டு விளையாட்டுத் துறை அமைச்சகம் குறித்த உடற்பயிற்சி நிலையத்தினை மூட உத்தரவிட்டுள்ளது.

AFP

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers