துபாயில் 15 மாடி குடியிருப்பில் பயங்கர தீவிபத்து: வீடியோ காட்சிகள் வெளியானது

Report Print Raju Raju in மத்திய கிழக்கு நாடுகள்
123Shares
123Shares
ibctamil.com

துபாய் மரினா பகுதியில் உள்ள 15 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட நிலையில் உள்ளே இருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

ஜென் டவர் என்ற 15 மாடி கொண்ட குடியிருப்பு கட்டிடத்தில் தளத்தில் ஹொட்டல்கள், கிளினிக் உள்பட பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் இயங்கி வருகிறது.

இந்த கட்டிடத்தில் ஆசிய நாடுகள் உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் கட்டிடத்தின் முதல் தளத்தில் உள்ள குடியிருப்பில் நேற்று திடீரென தீப்பிடித்தது.

ஏற்கனவே அந்த பகுதியில் அதிவேகத்துடன் புழுதிக்காற்று வீசிக்கொண்டிருந்ததால் கட்டிடம் முழுவதும் தீ பரவி கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது.

இதனால் விபரீதத்தை உணர்ந்த குடியிருப்பில் வசித்தவர்கள் தீயில் இருந்து தப்பிக்க அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தனர்.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்த நிலையில் கட்டிடத்தின் உள்ளே புகையால் மூச்சுத்திணறி உயிருக்கு போராடி கொண்டு இருந்தவர்களை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

அனைவருக்கும் முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டது, இந்த பயங்கர தீ விபத்தில் அந்த கட்டிடத்தின் 5 மாடிகள் முற்றிலும் எரிந்து நாசமாகின, 10 மாடிகளில் பலத்த சேதம் ஏற்பட்டது.

அந்த கட்டிடத்தில் வசித்து வந்தவர்களின் உடைமைகள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகின.

தீ விபத்து குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், தீவிபத்து மின்கசிவினால் ஏற்பட்டு இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இருப்பினும் முழுமையான விசாரணைக்கு பிறகுதான் தீ விபத்துக்கான காரணம் குறித்து தெரியவரும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்