30 ஆண்டுகளாக ஒரு நொடி கூட தூங்காத நபர்: வியக்க வைக்கும் காரணம்

Report Print Arbin Arbin in மத்திய கிழக்கு நாடுகள்

சவுதி அரேபியாவில் 70 வயது நபர் ஒருவர் கடந்த 30 ஆண்டுகளாக ஒரு நொடி கூட தூங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த நபர் தமது நிலை தொடர்பில் பல மருத்துவர்களை அணுகியும் அவர்களால் இதுவரை உறுதியான காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என கூறப்படுகிறது.

சவுதி ராணுவத்தில் சேவையாற்றிய காலகட்டத்தில் தொடர்ந்து 20 நாட்கள் குறித்த நபர் தூங்காமல் கண்விழித்துள்ளார்.

ராணுவ சேவையை முடித்துக் கொண்ட பின்னர் மருத்துவமனை சென்று தமது நிலைக்கு காரணம் என்ன என்பது தொடர்பில் விசாரித்துள்ளார்.

இதனையடுத்து 4 நாடுகளைச் சேர்ந்த சிறப்பு மருத்துவர்கள் குழு ஒன்று பரிசோதித்துள்ளது.

அவர்களால் உரிய காரணத்தை கண்டறியமுடியவில்லை என்றபோதும், குறித்த நபரின் மன அழுத்தமே காரணமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வந்தாலும், இதுவரை அவரால் தூங்க முடியவில்லை என கூறப்படுகிறது.

இதனிடையே அல் பஹா பகுதி ஆட்சியர் இவரது நிலை குறித்து தெரிய வந்து விசாரித்துள்ளார். அவரிடம் தமக்கு ஒரு கார் மாட்டும் போதும் என தெரிவித்ததை அடுத்து புதிய கார் ஒன்றை பரிசாக அளித்தது மட்டுமின்றி,

எஞ்சிய காலம் மட்டும் அவரது அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து தருவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார் அல் பஹா ஆட்சியர்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்