வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்ற நபருக்கு ஏற்பட்ட பயங்கரம்: என் நிலைமை எதிரிக்கும் வரக்கூடாது

Report Print Deepthi Deepthi in மத்திய கிழக்கு நாடுகள்

கத்தார் நாட்டுக்கு பெருங்கனவுடன் வேலைக்கு சென்ற நபர் 9 மாதங்கள் அங்கு தான் அனுபவித்த வேதனைகள் எதிரிக்கு கூட வரக்கூடாது என கூறியுள்ளார்.

இந்தியாவின் தெலுங்கனா மாநிலத்தை சேர்ந்த வினோத் (28) என்பவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கத்தார் நாட்டுக்கு சென்றுள்ளார்.

ராணுவத்தில் முடிவெட்டும் வேலை என்று கூறி இவர் அனுப்பப்பட்டார். ஆனால் அந்த வேலை இல்லை என்பது அங்கு இறங்கியபிறகுதான் தெரிந்தது.

ஆனால் இவரைப் பணிக்கு அமர்த்திய கத்தார் ராணுவத்துக்கு உணவு சப்ளை செய்யும் நிறுவனமான ஷேர்கா நிறுவனம் இழுத்து மூடப்பட்டதையடுத்து இவர் வாழ்க்கையும், கனவும் சுக்குநூறானது.

அங்கு இவருக்கு துப்புரவு பணியாளர் வேலையே கிடைத்தது. மாதச் சம்பளம் 1400 கத்தார் ரியால்களுக்கு வேலைக்கு ஒப்புக் கொண்டார். ஆனால் 3 மாதங்களுக்கு 1,100 ரியால்கள்தான் சம்பளம் வழங்கப்பட்டது.

ஆனால் துப்புரவுப் பணி கொடுத்த நிறுவனம் திடீரென மூடப்பட்டது. 3 மாதங்களில் நடுத்தெருவுக்கு வந்துள்ளார்.

பல நாட்கள் சாப்பிடாமல் பார்க்கில் இரவுகளை தூக்கமின்றி கழித்திருக்கிறேன். நான் உயிருடன் திரும்புவேன் என்று எதிர்பார்க்கவில்லை. இந்தியத் தூதரகம் எனக்கு உதவவில்லை. படாதபாடு பட்டு 9 மாத வேதனை நிரம்பிய, வலி நிறைந்த வாழ்க்கைக்குப் பிறகு இந்தியா திரும்பியுள்ளார்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்