10 வது மாடியில் இருந்து கீழே விழுந்த சிறுவன்: சினிமா பாணியில் பாதியில் காப்பாற்றிய இளைஞர்

Report Print Deepthi Deepthi in மத்திய கிழக்கு நாடுகள்

கஜகஸ்தான் நாட்டில் 10-வது மாடியில் இருந்து கீழே விழுந்த சிறுவனைப் பாதியில் இளைஞர் ஒருவர் காப்பாற்றிய வீடியோ வைரலாகியுள்ளது.

அஸ்டானாவில், 12 மாடிகள் கொண்ட குடியிருப்புப் பகுதி இருக்கிறது. அந்தக் கட்டடத்தின் 10-வது மாடியில் 7 வயது சிறுவன் ஒருவன் திடீரென ஜன்னல் வழியாகத் தொங்கிகொண்டிருந்துள்ளான்.

அச்சிறுவன் மீண்டும் வீட்டுக்குள் செல்ல முயற்சித்தும் முடியவில்லை, இதனால் கீழே இருந்த குடும்பத்தார் மற்றும் அருகில் வசிப்பவர்கள் கூச்சலிட்டபடி சிறுவனை தாங்கி பிடிப்பதற்காக பாய் ஒன்றைப் பிடித்து தயார் நிலையில் இருந்தனர்.

மீண்டும் வீட்டுக்குள் செல்ல எடுத்த முயற்சி தோல்வியில் முடிய, சிறுவன் 10 -வது மாடியில் இருந்து கீழே விழத் தொடங்கினான்.

இதனை கீழே இருந்தவர்கள் பார்த்து கூச்சலிட்டுள்ளனர். அப்போது 9 -வது மாடியில் இருந்த ஒருவர், அந்தச் சிறுவனை ஜன்னல் வழியாக அலேக்காகப் பிடித்து உள்ளே இழுத்துக் காப்பாற்றிவிடுகிறார்.

இந்தச் சம்பவங்கள் அனைத்தையும் எதிர் கட்டடத்தில் இருந்த ஒருவர் வீடியோவாகப் பதிவுசெய்திருக்கிறார். அந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவானது.

அர்டியோம் காரேவ் என்ற நபரின் இந்தச் செயலைப் பாராட்டி, நகராட்சி நிர்வாகம் அவருக்கு 1,400 டாலர் பரிசுத்தொகை அறிவித்தது. ஆனால், அவர் அதனை வாங்க மறுத்துவிட்டார்.

சினிமாவில் மட்டுமே நடக்கும் இதுபோன்ற காட்சிகள் தற்போது நிஜத்தில் நடந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த நபரை பலரும் பாராட்டியுள்ளனர்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்