சவுதி அரேபிய வரலாற்றில் முதல்முறையாக வங்கி தலைவரான பெண்!

Report Print Kabilan in மத்திய கிழக்கு நாடுகள்

சவுதி அரேபியாவில் வங்கி ஒன்றின் தலைவராக முதல் முறையாக பெண்ணொருவர் நியமிக்கப்பட்டுள்ளது.

முகமது பின் சல்மான் பட்டத்து இளவரசரான பின்னர், சவுதி அரேபியாவில் பல்வேறு புதிய மாற்றங்களை கொண்டு வருகிறார். குறிப்பாக பெண்களின் முன்னேற்றத்திற்காக, மரபு வழியாக பின்பற்றப்பட்டு வந்த பல வழக்கங்களில் மாற்றங்களை செய்துள்ளார்.

இதனால், அந்நாட்டில் பெண்களுக்கு வாகனம் இயக்குவது உள்ளிட்ட சில அடிப்படை உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சவுதி வரலாற்றில் முதல் முறையாக வங்கி ஒன்றின் தலைவராக பெண்ணொருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அந்நாட்டின் பிரபல பெண் தொழிலதிபரான லுப்னா ஒலயன் என்பவரே, தற்போதுள்ள சவுதி பிரித்தானிய வங்கி மற்றும் அலவ்வால் வங்கி ஆகியவற்றை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட உள்ள புதிய வங்கியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் மேற்படிப்பை முடித்த லுப்னா ஒலயன், தங்களது குடும்பத்தினர் நடத்தி வரும் தொழில் குழுமத்திற்கு தலைமை வகித்து வருகிறார்.

மேலும், பிரபல இதழான போர்ப்ஸின், மத்திய கிழக்கு நாடுகளில் 2018ஆம் ஆண்டு ஆதிக்கம் நிறைந்த பெண்களுக்கான பட்டியலில் முதலாவது இடத்தை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Reuters

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers