பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை வழக்கில் உண்மையை நிச்சயம் கண்டறிவோம் என சவுதி அரேபியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி கொலை செய்யப்பட விவகாரம் சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய ஐக்கிய நாடுகள் சபை, தனது முதல் அறிக்கையை கடந்த வாரம் வெளியிட்டது. அதில் சவுதி அதிகாரிகள் திட்டமிட்டு ஜமாலை கொலை செய்ததாகவும், துருக்கி அரசு இந்த கொலை குற்றத்தை விசாரிக்க அனுமதி அளிக்காமல் சவுதி 13 நாட்கள் தாமதப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஜமாலை கொலை வழக்கில் உண்மையை நிச்சயம் கண்டறிவோம் என சவுதியின் வெளியுறவுத் துறை அமைச்சர் அடெல் அல் ஜூபிர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,
‘ஜமால் கொலையை சவுதி அரேபிய அதிகாரிகள் தான் செய்துள்ளனர். இதன் காரணமாக 11 பேரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஜமாலின் உடல் பாகங்கள் எங்கு இருக்கிறது என்று இதுவரை தெரியவில்லை.
இதுதொடர்பாக துருக்கியை தொடர்பு கொண்டோம். ஆனால், அவர்கள் தரப்பில் இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. ஜமாலின் உடல் குறித்து நாங்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். இறுதியில் நாங்கள் உண்மையை கண்டறிவோம்’ என தெரிவித்துள்ளார்.
மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்