சவுதி பட்டத்து இளவரசர் பயன்படுத்தும் 5 டிரக் பொருட்கள்…!

Report Print Abisha in மத்திய கிழக்கு நாடுகள்

சவுதி பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மான், பாகிஸ்தான் செல்லவுள்ளதை அடுத்து, அவர் பயன்படுத்தும் பொருட்கள் 5 டிரக்குகளில் முன்னதாக அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பல்வேறு நாட்டுகளில் அழைப்புவிடுத்திருந்தார். இந்நிலையில் சவுதி மன்னருக்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று, சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், பாகிஸ்தானில் இந்த வாரம் இரண்டு நாட்கள் சுற்றுப் பயணம் செல்ல உள்ளார்.

இதில் பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இளவரசர், முகமது பின் சல்மான் பாகிஸ்தான் செல்லத் தயாராகும் நிலையில் அவர் பயன்படுத்தும் உடற்பயிற்சி உபகரணங்கள், மரச்சாமான்கள் ஆகியவை 5 டிரக்குகளில் இஸ்லாமாபாத்திற்கு முன்கூட்டியேகொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பட்டத்து இளவரசர் உடன் செல்லும் அதிகாரிகளுக்காக பாகிஸ்தானில் உள்ள முக்கிய இரண்டு ஓட்டல்களில் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்