உலகின் மிகப்பெரிய கட்டிடத்தில் இலங்கையின் தேசியக்கொடி

Report Print Deepthi Deepthi in மத்திய கிழக்கு நாடுகள்

துபாயில் உள்ள உலகின் மிகப்பெரிய கட்டிடமான Burj Khalifa இலங்கை தேசியக்கொடியின் வண்ணத்தில் தோன்றி குண்டுவெடிப்பில் இறந்த மக்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.

இலங்கை குண்டுவெடிப்பில் 253 பேர் உயிரிழந்துள்ளனர், 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும்விதமாக துபாயில் உள்ள Burj Khalifa என்ற மிகப்பெரிய கட்டிடம் இலங்கையின் தேசியக்கொடியில் உள்ள வண்ணத்தை வெளிக்காட்டி இரங்கல் தெரிவித்துள்ளது.

அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம் மற்றும் எமிரேட்ஸ் அரண்மனை ஆகியவை இந்த வாரம் இலங்கை தேசியக்கொடியின் வண்ணங்களைக் காட்டியதன் மூலம் தமது ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளன.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்