கப்பலில் திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்து: சிக்கித்தவித்த 13 இந்தியர்கள்!

Report Print Vijay Amburore in மத்திய கிழக்கு நாடுகள்

ஷார்ஜாவில் திடீரென தீ பற்றிய கப்பலில் இருந்து 13 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

ஷார்ஜாவில் உள்ள காலித் துறைமுகத்தில் ஏற்றுமதி பொருட்களுடன் நின்று கொண்டிருந்த கப்பல் ஒன்றில், உள்ளூர் நேரப்படி காலை 6.30 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் சிக்கி கொண்ட 13 இந்தியர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து ஊடக மற்றும் பொதுமக்கள் தொடர்பு துறை இயக்குனர் மேஜர் ஹனி அல் நக்வி கூறுகையில், கப்பலில் 6,000 கேலன்கள் டீசல், 120 வாகனங்கள் மற்றும் 300 டயர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தன.

தீயணைப்பு துறையினருக்கு அதிகாலை 6.44 மணிக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் 7.25 மணிக்கு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த சம்பவத்தில் உயிர்சேதம் ஏதுமின்றி பத்திரமாக மீட்கப்பட்ட அனைவருக்கும் முதலுதவி அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்